9 மாநிலங்களில் விலைவாசி விர்ர்ர்ர்ர்….தமிழ்நாட்டில் மட்டும் சாதித்தது எப்படி?.. முழுத் தகவல்!
சென்னை: தேசிய அளவில் பணவீக்கம் 5.55 சதவீதம் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பணவீக்கம் தேசிய சராசரியை விடவும் குறைவாக 4.97 சதவீதமே இருப்பதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ஏதேனும் ஒரு துறையில் தமிழ்நாடு நல்லதொரு வளர்ச்சியை அடைந்து வருவதற்கான புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டேதான் இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவரது எக்ஸ் தளத்தில் ஆங்கில பத்திரிகையில் வெளியான ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அதில் இந்திய அளவில் தமிழ்நாட்டில் பணவீக்கமானது மிகக் குறைந்த அளவில் தனது தாக்கத்தைப் பதிவு செய்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பரில் தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, இந்தியாவிலுள்ள ஒன்பது மாநிலங்கள் அதிக அளவிலான பணவீக்க விகிதத்தைப் பதிவு செய்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. சராசரி இந்திய நுகர்வோரின் வாழ்க்கைச் செலவு கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 5.55 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஒடிசாவில் 7.65 சதவீதமும், ராஜஸ்தானில் 6.99 சதவீதமும் ஹரியானாவில் 6.78 சதவீதமும் அதிகரித்துள்ளது. பீகார், கர்நாடகா, பஞ்சாப், தெலுங்கானா, குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் தேசிய சராசரியை விட அதிக பணவீக்க விகிதம் பதிவாகி உள்ளது. அதாவது இம்மாநிலங்களில் 5.56 சதவீதம் முதல் 6.54 சதவீதம் வரை உயர்ந்துள்ளது எனக் கூறப்பட்டிருக்கிறது.

இந்தியாவின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதமானது அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களை விட அதிகமாக உள்ளது.
அக்டோபரில் இங்கிலாந்தில் பணவீக்கமானது 4.6 சதவீதமாகவும், நவம்பரில் அமெரிக்காவில் 3.1 சதவீதமாகவும் பதிவான நிலையில், ஜப்பானில் இது 3.3 சதவீதமாக இருந்துள்ளது. ஜெர்மனியில் 2.3 சதவீதமும், பிரான்சில் 3.8 சதவீதமும் விலை உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவில் பணவீக்கம், பிரிக்ஸ் நாடுகளில் (பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) இந்தியாவை விட அதிகமாகவே உள்ளது. தென்னாப்பிரிக்காவில் 5.9 சதவீதமும், ரஷ்யாவில் 7.5 சதவீதமும் விலைவாசி உயர்ந்துள்ளது.
அதைப்போலவே மறுபுறம் சீனா கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் -0.5 சதவிகிதம் எதிர்மறையான பணவீக்கத்தைப் பதிவு செய்துள்ளது. இது தொற்றுநோய்க்குப் பிறகு பலவீனமான பொருளாதார மீட்சிக்கான அறிகுறியாகும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தங்கம் தென்னரசு, "இந்திய அளவில் பணவீக்கம் 5.55 சதவீதம் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பணவீக்கம் தேசிய சராசரியை விடவும் குறைவாக 4.97 சதவீதமே இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது, விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு சிறப்பானதொரு இடத்தைப் பிடித்திருக்கின்றது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியச் சராசரி பணவீக்கமானது .55% ஆக இருக்கும் நிலையில் அதற்கு மேலாக உத்தரப் பிரதேசம், பீகார், குஜராத், தெலங்கானா, கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஒடிசா போன்ற மாநிலங்களில் விலைவாசியானது கட்டுப்பாட்டை மீறி உயர்ந்துள்ளது. இதில் மிக மோசமான பணவீக்கத்தைப் பதிவு செய்து ஒடிசா மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது என்பது சோகத்திற்குரிய செய்தி.
அதேபோல் தேசிய சராசரி பணவீக்கத்தைவிடக் குறைந்துள்ள பட்டியலில் தமிழ்நாடு 7வது நிலையில் உள்ளது என்பது ஆறுதல் தரும் செய்தியாக இருக்கிறது. இந்தப் பட்டியலில் மஹாராஷ்டிரா 5.48% என அளவில் முதல் நிலையில் இருக்கிறது. அதற்குக் கீழாக ஆந்திரா, உத்தரகண்ட், ஜார்கண்ட், அசாம், இமாச்சல் பிரதேஷ் மாநிலத்தை அடுத்து தமிழ்நாட்டுப் பட்டியல் இடப்பட்டுள்ளது.
நமக்கும் கீழாகப் பணவீக்கத்தைப் பதிவு செய்துள்ள மாநிலங்களில் பட்டியலில் மத்திய பிரதேஷ், கேரளா, மேற்கு வங்கம்,, ஜம்மு & காஷ்மீர், சத்தீஸ்கர் ஆகியவை இடம்பிடித்துள்ளன. இந்தியாவிலேயே மிகக் குறைவான பணவீக்கத்தைப் பதிவு செய்துள்ள மாநிலமாக டெல்லி உள்ளது. இம்மாநிலத்தில் பணவீக்கமானது 3.10% என்ற நிலையில் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பணவீக்கமானது குறைந்த அளவில் இருப்பதற்கும் விலைவாசி கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதற்கும் காரணம் என்ன என்ற கேள்விக்கு, மாநிலத் திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன், "நம் மாநிலத்தில் பொதுவிநியோக திட்டமானது மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குடும்ப அட்டையை வைத்துள்ள ஒருவர் மாதத்திற்குத் தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்களை நியாயவிலைக்கடைகள் மூலம் பெற்றுவிடுகிறார். இதனால் வெளிச்சந்தையில் விலைவாசியானது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய பலம்" என்கிறார்
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications