EXCLUSIVE: மீட்டிங்கில் திட்டினாரா அண்ணாமலை? பாஜக தேசிய தலைமையிடமே புகார் - நிர்மல் குமார் ஓபன் டாக்

“கட்சியில் உண்மையாக வேலைபார்த்து உழைத்த நிர்வாகிகள் வெளியேறுவது கண்டிப்பாக கட்சிக்கு பாதிப்புதான். அதை உணரும் தலைமை இல்லை”

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் இருந்து யாரையும் ஏமாற்றியோ, யாரையும் கெடுத்துவிட்டோ வெளியேறவில்லை என்றும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது பாஜக தேசிய நிர்வாகிகளிடமும் தெரிவித்து இருப்பதாக அக்கட்சியில் இருந்து விலகிய நிர்மல் குமார் ஒன் இந்தியா தமிழுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பெயரை குறிப்பிடாமலேயே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார் அக்கட்சியின் முன்னாள் ஐடி விங்க் தலைவர் நிர்மல் குமார்.

இதுகுறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பாக அவரிடம் தொலைபேசி வாயிலாக பேசினோம். பாஜகவிலிருந்து விலகியதற்கான காரணம் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாம் எழுதிய கேள்விக்கு அவர் தன்னுடைய விளக்கத்தை அளித்து இருக்கிறார்.

விலகலுக்கான காரணம்

விலகலுக்கான காரணம்

கேள்வி: தமிழ்நாடு பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து உள்ளீர்கள். இந்த திடீர் முடிவுக்கான காரணம் என்ன?

நிர்மல் குமார்: இது திடீர் முடிவெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட ஒன்றைரை வருடங்களாக ஒவ்வொரு நிமிடமும் யோசித்து எடுத்த முடிவு. நான் கிட்டத்தட்ட 2009 ஆம் ஆண்டில் இருந்து கட்சியில் பயணித்துக்கொண்டு வருகிறேன். எனக்கென எந்த கோரிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்தது இல்லை. கட்சியில் நடக்கும் விசயங்களை பார்த்து பொறுமையாக எடுத்த முடிவுதான் இது. என்னை நம்பி நிறைய பேர் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயணித்தார்கள். அவர்களுக்கு நான் ஒரு விளக்கத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். என்ன இப்படி செய்துவிட்டார் என்று அவர்கள் நினைக்கக்கூடாது. எனவே இந்த விளக்கத்தை கொடுத்தேன். இவ்வளவு நாட்களாக இருந்த கட்சி பற்றி வெளியில் பேசுவது நன்றாக இருக்காது. நம்மை நம்பி அங்கு தெரிவித்த விசயங்களையும் வெளியில் சொல்லக்கூடாது. காலப்போக்கில் அந்த கடிதம் சேர வேண்டிய கட்சி நிர்வாகிகளுக்கு சேர்ந்து இருக்கும்.

420 மலை யார்?

420 மலை யார்?

கேள்வி: உங்களை நம்பி நிறைய பேர் கட்சியில் இருக்கிறார்கள் என்று சொன்னீர்கள். அவர்கள் எந்த மாதிரியான முடிவை எடுப்பார்கள்?

நிர்மல் குமார்: அது அவர்களுடைய தனிப்பட்ட முடிவு. அவர்கள் எப்படி யோசிக்கிறார்களோ அப்படி எடுப்பார்கள்.

கேள்வி: நீங்கள் பெயரை குறிப்பிடவே இல்லை. ஆனால், எல்லோருக்கும் நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று புரிந்தது. நீங்கள் 420 மலை என்று குறிப்பால் புரியும் வகையில் கூறி இருந்தீர்கள். அதற்கான காரணம் என்ன?

நிர்மல் குமார்: நான் கட்சியை பாதிக்கும் வகையில் பேசக்கூடாது என்று நினைத்தேன். நான் தெரிவிக்கும் விசயங்களால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. ஏனென்றால் அங்கு இருக்கும் நிர்வாகிகளுக்கு என்னால் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது.

தமிழிசைக்கு பிறகு

தமிழிசைக்கு பிறகு

கேள்வி: உங்கள் கடிதத்தில் 2019 யில் இருந்த கட்சி அமைப்பில் தற்போது 20% கூட இல்லை என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். அப்போது தமிழிசை இருந்தார்கள். அதன் பிறகு எல்.முருகன் வந்தார்கள். தமிழிசை சென்றதற்கு பிறகு தமிழ்நாடு பாஜகவில் இந்த பிரச்சனை வருவதாக சொல்கிறீர்களா? இல்லை அண்ணாமலை வந்ததற்கு பிறகுதானா?

நிர்மல் குமார்: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மட்டும்தான்.

கேள்வி: அண்ணாமலை அவர்களின் எந்த மாதிரியான விசயங்கள் உங்களை பெரிய அளவில் பாதித்தது? இந்த முடிவை எடுப்பதற்கு தள்ளியது எது?

நிர்மல் குமார்: நான் எல்லாவற்றையும் குறிப்பிட்டு உள்ளேன். என்னை மட்டுமல்ல, பொதுவாகவே கட்சியில் உள்ள நிர்வாகிகள் எல்லோரையும் பாதித்த விசயங்கள்தான். பொதுவான விசயங்கள்தான். தனிப்பட்ட முறையில் அரசியலில் அழுத்தங்கள் இருக்கவே செய்யும். அதை காரணமாக எடுக்க முடியாது. சில முக்கியமான விசயங்களை கூர்ந்து கவனிக்க வேண்டும். அதைதான் நான் பதிவு செய்ய விரும்புனேன்.

தேசிய தலைமையிடம் புகார்

தேசிய தலைமையிடம் புகார்

கேள்வி: தமிழ்நாடு பாஜகவில் இருக்கும் மூத்த நிர்வாகிகள், தேசிய அளவில் இருக்கும் மூத்த நிர்வாகிகளிடம் இது பற்றி பேசி இருக்கிறீர்களா?

நிர்மல் குமார்: என்னால் முடிந்த அளவு பல விசயங்களை கண்டிப்பாக காண்பித்துள்ளேன். தனிப்பட்ட விசயங்களையும் கொடுத்து இருக்கிறேன்.

கேள்வி: டாக்டர் சரவணன், சூர்யா சிவா, காயத்ரி ரகுராம் என அடுத்தடுத்து தமிழ்நாடு பாஜகவில் அறியப்பட்ட முகங்கள் வெளியேறுகிறார்கள். நீங்கள் உட்பட இந்த விலகல்கள் கட்சியை எந்த அளவுக்கு பாதிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

நிர்மல் குமார்: எல்லாம் பாதிப்புதான். கட்சியில் உண்மையாக வேலைபார்த்து உழைத்த நிர்வாகிகள் வெளியேறுவது கண்டிப்பாக கட்சிக்கு பாதிப்புதான். அதை உணரும் நாட்கள் இல்லை. அதை உணரும் தலைமை இல்லை. அதை பற்றி என்ன பேசிக்கிட்டு.

அண்ணாமலை சர்கிள்

அண்ணாமலை சர்கிள்

கேள்வி: அண்ணாமலை அமர் பிரசாத் ரெட்டி, செல்வகுமார் போன்ற வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைக்கிறார்கள். ஆடியோ, வீடியோ விசயத்தையும் கூறுகிறார்களே..

நிர்மல் குமார்: அதை தலைமைதான் சரி செய்ய வேண்டும். தனிப்பட்ட முறையில் நான் எந்த நபரையும் சொல்லவில்லை. சரி செய்யாமல் இருப்பதே பெரிய தவறுதான். தலைவர்தான் சரி செய்ய வேண்டும்.

கேள்வி: காயத்ரி ரகுராம் ஒரு முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்தார். ஒரு கூட்டத்தில் அவரை பற்றி அண்ணாமலை தவறாக பேசியதாக கூறினார். இப்போது நீங்கள் விலகிய பிறகும், உங்களையும் அண்ணாமலை பாஜக கூட்டத்தில் வைத்து அவமானப்படுத்தும் வகையில் பேசியதாக ஒரு தகவல் பரவுகிறது. அது உண்மையா?

நிர்மல் குமார்: அதை பற்றி நான் பேச விரும்பவில்லை. கட்சியில் இருக்கும்போது நாங்கள் கலந்துகொண்ட கூட்டத்தை பற்றி பேசினால் நன்றாக இருக்காது. மூடிய அறையில் நடந்த விசயங்களை பற்றி பேசியதை சொன்னால் நல்ல தன்மையாக இருக்காது. இருக்கும் வரை நம்மை நம்பி பேசப்பட்ட விசயங்கள். அது எனக்கு எதிராக பேசினாலும் அதை பேச வேண்டாம் என்று பார்க்கிறேன்.

அமைச்சரும் அண்ணாமலையும்

அமைச்சரும் அண்ணாமலையும்

அமைச்சருடன் அண்ணாமலை பேசிக்கொண்டு இருக்கிறார் என்று நீங்கள் குறிப்பிட்டு உள்ளீர்கள். நீங்கள் சட்டப் போராட்டம் நடத்தும் அமைச்சர் என்றால் அது செந்தில் பாலாஜி என்று எல்லோருக்கும் தெரியுமே.. அவரை தான் சொன்னீர்களா?

நிர்மல் குமார்: விரிவாக பேச வேண்டாம் என்று பார்க்கிறேன். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்து இருக்கும். இதையெல்லாம் எதிர்காலத்தில் ஒவ்வொன்றாக பார்ப்பீர்கள்.

அதிமுகவில் இணைந்த காரணம்

அதிமுகவில் நீங்கள் இணைந்து இருக்கிறீர்கள். அதிமுக பாஜகவுடன் 2024 தேர்தலில் கூட்டணியில் இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். எனவே அதே கூட்டணியில்தான் நீங்கள் தொடர்ந்து செயல்படவேண்டி இருக்கும். அடுத்த ஆண்டு தேர்தல் சமயங்களில் அண்ணாமலையுடன் இணைந்து பயணிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அது உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது?

நிர்மல் குமார்: எந்த விதத்திலும் யாரையும் ஏமாற்றியோ, யாரையும் கெடுத்துவிட்டோ, எதுவும் இல்லாமலும் கட்சியிலிருந்து வெளியேறவில்லை. பொதுவான காரணங்களை சொல்லி விலகினேன். எதையும் வாங்கிவிட்டோ, எதையும் எடுத்துக்கொண்டே வெளியேறவில்லை. அது அல்லாமல் இன்று அதிமுகவை 2017 ல் இருந்து பல கஷ்டங்கள் பல பிரச்சனைகளை தாண்டி கட்டி காப்பாற்றியவர் எடப்பாடியார். இன்று தொண்டர்களுடைய மதிப்பையும் பெற்று நம்பிக்கையையும் பெற்று ஒரு கட்சியை இவ்வளவு தூரம் கொண்டு சென்று கட்டிக்காப்பாற்றி ஆளுமையாக இருப்பதற்கு எல்லாம் மிகப்பெரிய உழைப்பு அவரிடம் இருக்கிறது. ஏனென்றால் எளிதில் ஆளுமையாக உருவாகிவிட முடியாது. ஒவ்வொரு நாளும் அதற்கான வேலை செய்துதான் கொண்டு வர முடியும். இதையெல்லாம் பார்த்துதான் நான் கட்சியில் சேர்ந்தேன். இந்த காலத்தில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் எடப்பாடி அவர்கள்தான் எதிர்காலமாக இருப்பார். அவரால்தான் முடியும். வேறு யாராலும் முடியாது. அந்த நம்பிக்கை எடுக்க வலுவாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+