நிர்மலா சீதாராமன்! செங்கோட்டையன் நீக்கத்தால் குலுங்கும் எடப்பாடியின் அரசியல்? திமுகவை வெல்ல முடியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: செங்கோட்டையன் நீக்கத்தால் கொங்கு மண்டலத்தில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று ஒருசாராரும், நிச்சயம் கொங்கு மண்டல வாக்கு சதவீதத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சறுக்கல் ஏற்படும் என்று மற்றொரு சாராரும் கருத்துக்களை கூறி வருகிறார்கள். அந்தவகையில் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியும் தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Aagayam Tamil என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கையே பல கட்சி விரோதம்தான்.. அவர் தன்னை பலப்படுத்தி கொள்வதற்கும், கட்சிக்குள் தன் பலத்தை தக்க வைத்து கொள்வதற்கும், ஒற்றை தலைமை பதவிக்காகவும், தனக்கு எதிராக யாரும் கேள்விகளை கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவும், ஓபிஎஸ்ஸை கட்சி விரோத நடவடிக்கை என்று சொல்லவில்லையே?

Nirmala Sitharaman Sengottaiyan Edappadi Palanisamy

பாஜக - அதிமுக

ஒற்றை தலைமைக்காகவே ஓபிஎஸ்ஸை காலி செய்தார்.. பாஜக நபர் என்று அன்று ஓபிஎஸ் விரட்டிவிட்ட எடப்பாடி பழனிசாமி, இன்று யாருடைய ஆளாக இருக்கிறார்?

ஜெயலலிதா காலத்தில் இருந்த வாக்காளர்களில் பாதிபேர் தான் எடப்பாடியிடம் தற்போது உள்ளார்கள்.. அதிமுக 2 ஜாதிக்கட்சியாக போய்விட்டது.. தென்மாவட்டங்களில் டெபாசிட் போய்விட்டது. விளவங்கோட்டில் 4வது இடம், அதிமுக ஆட்சிக்கு வந்த புதுச்சேரியில் 4வது இடத்தை பெற்றது.

செங்கோட்டையன் அரசியல்

சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் போன்றோர் வாக்குகளை சிதறடித்ததுபோல், செங்கோட்டையனாலும் குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை எடப்பாடிக்கு பாதிப்பை உறுதியாக ஏற்படுத்த முடியும். அதிலும் கொங்கு மண்டலத்தில் சிறிய அளவிலான சதவீத பாதிப்பை ஏற்படுத்தினாலும் அது எடப்பாடிக்கு சறுக்கல்தான்.

செங்கோட்டையனும், அண்ணாமலையும் ஒத்த கருத்தில் இருக்கிறார்கள்.. அதாவது எடப்பாடியை வீழ்த்தினால்தான் தங்களது அரசியல் என்ற ஒற்ற கருத்தில் உள்ளனர்.. இவர்களால் எடப்பாடி அரசியலை தாராளமாக வீழ்த்த முடியும்.. எடப்பாடி பழனிசாமி அல்லாத அதிமுகவை உருவாக்கவே செங்கோட்டையன் முயற்சி செய்கிறார்..

சசிகலா, தினகரன், ஓபிஎஸ் இவர்கள்தான் முக்குலத்தோர் சமூகத்தில், பெரிய அளவுக்கு உயர்ந்த, பெரிய அளவிலான தலைவர்கள். ஆனால் முக்குலத்தோர்கள் எடப்பாடிக்கு எதிராக இருக்கிறார்கள்.. அச்சமூக முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியுடன் இருந்தும்கூட, ராமநாதபுரத்தில் டெபாசிட் இல்லை.. திருநெல்வேலி, தேனியில் டெபாசிட் இல்லை.. மதுரையில் 3வது இடத்துக்கு போய்ட்டாங்க..

வன்னியர் வாக்கு சாதகம்

எடப்பாடி பழனிசாமியிடம் தற்போதுள்ள இரட்டை இலை வன்னியருக்கு சாதகமான இரட்டை இலை. மற்ற சமூகத்தினருக்கு அநீதியை இழக்க செய்தார்..

பாதிக்கப்பட்ட மக்கள் ஜெயலலிதாவுக்காகவும், எம்ஜிஆருக்காகவும் இந்த சின்னத்தை ஆதரித்து கொண்டே இருப்பார்களா? 10.5-லேயும் முக்குலத்தோர்களுக்கு கோபம் உள்ளது.. 3 முக்குலத்தோர் பெரிய தலைவர்களை ஒதுக்கிவிட்டு, எடப்பாடி பழனிசாமியே தலைவராகிவிட்ட கோபம் இன்னமும் அவர்களுக்கு உள்ளது.

நிர்மலா சீதாராமன்

சீட் விவகாரத்தில் அதிமுக சரியாக இருந்தால் பாஜக கூட்டணி தொடரும்.. பாஜக சார்ரபில் நிர்மலா சீதாராமன் அல்லது வேறு யாரையாவது ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகவும் நிறுத்தலாம்.. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் என்றால், முக்குலத்தோர் எதிராக திரும்புவார்கள்.. இதனால் 90 சீட் காலியாகிவிடும்.

செங்கோட்டையன் தற்போது விலக்கப்பட்டதால், சீட்டு கன்வர்ட் ஆகாத அளவுக்கு கொங்கு வேளாளர்கள் எதிராக இருப்பார்கள்.. பாஜகவுக்கு சரியான அளவு சீட் தராவிட்டால், அண்ணாமலையும் எதிராக போய்விடுவார்.. எனவே எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, ஸ்டாலினை எந்த காலத்திலும் தோற்கடிக்க முடியாது.. 2026-லயும் முடியாது, 2031-லயும் முடியாது.

20 சதவீதம் பலம்

ஆனால் வேறொருவர் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ள மாட்டார். காரணம் அதிமுகவை வலுவாக வைத்திருக்கிறார்.. அதிலும் 20 சதவீதம் பலம் கொண்ட எடப்பாடி பழனிசாமி, வெறும் 10 சதவீதம் பலம் கொண்ட கட்சியின் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் மிக மிக குறைவு.

அதேசமயம் எடப்பாடி பழனிசாமியால் பாஜகவை எளிதில் உதறித்தள்ளவும் முடியாது.. காரணம்,தனித்து போட்டியிடக்கூடிய சக்தி அண்ணாமலைக்கு உள்ளது என்பதையும் எடப்பாடி நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+