நிர்மலா கிட்ட காசு இல்லை.. அப்ப தமிழிசையிடம் பணமிருக்கா? நிதியமைச்சர் மீது பாய்ச்சல்? யார்னு பாருங்க
சென்னை: தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணமில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதை, தமிழக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.. என்னவாம்?
இந்த முறை எம்பி தேர்தலில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அல்லது கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்திய தொகுதிகளில் போட்டியிடுவார் என்று பல்வேறு தகவல்கள் வட்டமடித்து கொண்டேயிருந்தன..

எந்த தொகுதி: அதேபோல, சொந்த மாநிலமான தமிழ்நாட்டிலோ அல்லது கணவரின் மாநிலமான ஆந்திராவிலோ, நிர்மலா சீதாராமன் நிச்சயம் களமிறக்கப்படலாம் என்றும் தகவல்கள் கசிந்தன. ஆனால், இந்த கணிப்புகள் எல்லாமே தவிடுபொடியாகிவிட்டன.
தனியார் டிவி சேனலுக்கு பேட்டி அளித்துள்ள நிர்மலா சீதாராமன் தன்னுடைய நிலைப்பாட்டை ஓபனாகவே சொல்லியிருக்கிறார்.. "தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்கிட்ட பணம் இல்லை. அதுவும் இல்லாமல், தமிழகம் அல்லது ஆந்திராவில் போட்டியிட்டால் மதம், சாதி போன்றவை வெற்றிக்கான காரணிகளில் பிரதானமானதாக பார்க்கப்படும்.. அதனால் நான் போட்டியிடவில்லை. எனது முடிவை கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது" என்றார் நிர்மலா சீதாராமன்.
நிதியமைச்சர்: "ஒரு நாட்டின் நிதியமைச்சராக இருந்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என்று சொல்கிறீர்களே?" என்று கேள்வி எழுப்பப்பட்டது... அதற்கு நிர்மலா சீதாராமன், "நான் கையாளும் நிதி இந்தியாவுக்கானது... அது எனக்கானது இல்லை. என்னுடைய சம்பளம், வருமானம், சேமிப்பு மட்டுமே எனக்கானது. மற்றவை எல்லாம் இந்தியாவுக்கான நிதி'' என்று அதற்கும் விளக்கம் ஒன்றினை தந்திருக்கிறார்.
நிர்மலா சீதாராமன் இப்படி கூறியிருப்பது, நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. மற்றொருபுறம் தீவிரமான எதிர்க்கட்சியான காங்கிரஸ் இதை விமர்சித்துள்ளது. அந்தவகையில், தமிழக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் இதுகுறித்து தன்னுடைய சந்தேகத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
"தேர்தலில் போட்டியிட பணமில்லை என்று நிர்மலா சீதாராமன் சொல்கிறாரே.. அப்படின்னா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விட, தமிழிசை, எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? வெயிலில் சுத்தாமல், எந்தவித சிரமமும் இல்லாமல், ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்கு நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் இவர்கள் எல்லாம் ஆசைப்படுகிறார்கள்" என்று செல்வப்பெருந்தகை தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தேர்தல் பத்திரங்கள்: கடந்த வாரம்கூட, இப்படித்தான் நிர்மலா சீதாராமன் மீதான விமர்சனத்தை முன்வைத்திருந்தார் செல்வப்பெருந்தகை.. அதாவது, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டிருந்த அன்றைய தினமே, காங்கிரஸ் கட்சி இதையும், கடுமையாகவே விமர்சித்திருந்தது.
குறிப்பாக மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "எந்த நிறுவனங்களில் தேர்தல் நிதி நன்கொடையாக பெற்றுள்ளார்கள்? அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற மத்திய முகமைகள் சோதனைக்கு பிறகு, எந்தெந்த நிறுவனங்களில் இருந்து பாஜகவுக்கு தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வந்திருக்கின்றன? போன்ற விவரங்கள், தேர்தலுக்கு முன்பாக பொதுவெளியில் வந்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.
சர்வாதிகாரம்: இதை மூடி மறைக்க முயற்சித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் ஆகியோர் முழு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். இதென்ன சர்வாதிகார ஆட்சியா அல்லது ஜனநாயக ஆட்சியா? இதையெல்லாம் மக்கள் தேர்தலில் முடிவு செய்வார்கள் என்று விமர்சித்திருந்தார்.
இப்போது மீண்டும் நிதியமைச்சரின் கருத்துக்களை செல்வப்பெருந்தகை விமர்சித்திருப்பது, பெரும் சலசலப்பை உண்டுபண்ணியிருப்பதுடன், பாஜகவினருக்கும் எரிச்சலை தந்துவருகிறது. அடுத்து என்ன நடக்க போகிறதென்று தெரியவில்லை.. பொறுதிருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications