தமிழன் (மூப்பனார்) பிரதமராகும் நேரத்தில்.. தடுத்தது பெரிய துரோகம்.. நிர்மலா சீதாராமன் தாக்கு
சென்னை: தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்துவிட்டனர்.தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் அவரை பிரதமராக விடாமல் தடுத்த சக்திகள் யார்? என்று நம் அனைவருக்கும் தெரியும். ஒரு தமிழன் (மூப்பனார்) பிரதமராகும் நேரத்தில், அவருக்கு ஆதரவு அளிக்காமல் தடுத்து விட்டனர். மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழனுக்கு செய்த மிகப் பெரிய துரோகம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே மூப்பனாரின் 24-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதற்காக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மூப்பனாரின் நினைவிடத்தில் பலர் அஞ்சலி செலுத்தினார்கள். மூப்பனாரின் நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "தமிழ்நாட்டில் எளிமையும், நேர்மையும், தேசியமும் கலந்த தலைவராக மூப்பனார் இருந்தார். அவருக்கு எல்லா மாநிலத்திலும், மதிப்பும், மரியாதையும் இருந்தது. அது மட்டுமின்றி, மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் தனி ஆளுமையுடன் இருந்தார்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு வந்தது (1996ல்) . ஆனால் அவரை பிரதமராக விடாமல் தடுத்த சக்திகள் யார்? என்று நம் அனைவருக்கும் தெரியும். இன்று தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் ஒரு தமிழன் (மூப்பனார்) பிரதமராகும் நேரத்தில், அவருக்கு ஆதரவு அளிக்காமல் தடுத்து விட்டனர். மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது தமிழனுக்கு செய்த மிகப் பெரிய துரோகம் ஆகும்.
இப்போதைய காலக்கட்டம் என்பது, 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் நல்லாட்சி அமைய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டிய தருணம் ஆகும். வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் நல்லாட்சி கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நல்லாட்சி அமைய நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இதுவே மக்கள் தலைவர் மூப்பனாருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. போதைப்பொருள் வேண்டாம். சாராயம் தண்ணீரை விட கேடு கெட்ட நிலையில் பரவுகிறது. மக்கள் எல்லோருக்கும் தொண்டு செய்வது நமது கடமை. இந்த கூட்டணியை நல்லபடியாக நடத்த வேண்டும்" இவ்வாறு பாஜக மூத்த தலைவரும் மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்தநிகழ்வில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "மூப்பனார் தேசிய தலைவராக இருந்து இந்திய அளவில் தனக்கென்று தனி முத்திரையைப் பதித்தார். எளிமையாக இருந்து அனைவரிடமும் அன்பாகப் பழகும் பண்பாளர் ஆவார். தேசத்திற்காகவும், நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்" என்று பாராட்டினார்
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், "இந்த மேடையில் மூப்பனார் குறித்து பேசுவதற்கு அருகதை இல்லாத ஒரே ஆள் நான் தான்.மூப்பனார் வழியில் நேர்மையான அரசியலை தமிழக மண்ணில், இந்திய மண்ணில் கொடுப்பதற்கு நாம் எல்லோரும் ஆயத்தமாக வேண்டும். 2026-ல் நேர்மையான ஆட்சியை தருவதற்கு நாம் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என சாமானிய மக்கள் உள்பட அனைவரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
இன்றைக்கு நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த மேடையில் இப்பொழுதுதான் பேசிவிட்டு போய் இருக்கிறார்கள். முதலமைச்சர் நாற்காலியில் எடப்பாடி தான் அமரப் போகிறார் என்று அனைவரும் சொன்னீர்கள். அந்த வகையில், 2026-ம் ஆண்டில் நிச்சயமாக அது நடக்கும். ஜி. கே.மூப்பனார் மேலே இருந்து நம்மளை பார்த்து கொண்டு இருப்பார்கள். நிச்சயமாக அவரது ஆசை 2026ம் ஆண்டு தேர்தலில் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மேடையில் இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications