பொருட்களின் விலை அடியோடு மாறப்போகிறது.. ஜிஎஸ்டி வரியில் வருது பெரிய மாற்றம்.. நிர்மலா முக்கிய பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), சுங்கத் துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவுள்ளார். வரி செலுத்துவோர் சேவை, வரி தொடர்பான வழக்கு மேலாண்மை, பணத்தைத் திரும்பப் பெறுதல், வர்த்தக வசதி, ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் அவர்களின் செயல்திறனை மதிப்பிடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

gst

வருமான வரித்துறையின் செயல்திறன் குறித்த ஆய்வு

ஜூன் 23ஆம் தேதி வருமான வரித்துறையின் முதன்மை தலைமை ஆணையர்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கவுள்ளார். அப்போது ஜிஎஸ்டி சேவை வழங்குவதை மேம்படுத்துவது, வழக்கு எண்ணிக்கையை குறைப்பது, ஜிஎஸ்டி செலுத்துவதற்கான பொறுப்புணர்வை அதிகரிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தப்படும். மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் இருக்கும் கால அளவை ஆய்வு செய்து, பழைய வழக்குகளை விரைவாக முடித்து வழக்குகளின் சுமையைக் குறைக்கவும் அமைச்சர் வலியுறுத்துவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை முறைப்படுத்துவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் தனது அடுத்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜிஎஸ்டி வரி விகிதத்தில் தற்போதுள்ள நான்கு அடுக்குகளை மூன்று அடுக்குகளாகக் குறைக்கும் வகையில், 12% வரி விதிப்பை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரி விகிதங்களை முறைப்படுத்த ஆலோசனை

வரி விகிதங்களை முறைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வரும் அமைச்சர்கள் குழுவுக்கு (GoM) ஆலோசனை வழங்கும் அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் மத்தியில், 12% வரி விதிப்பு அடுக்கு இனி தேவையில்லை என்ற ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது. பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை 5% வரி விதிப்பு அடுக்குக்கு மாற்றவும், மற்றவற்றை 18% வரி விதிப்பு அடுக்குக்கு மாற்றவும் வாய்ப்புள்ளது.
12% வரி விதிப்பு அடுக்கை நீக்குவதற்கு பெரும்பாலான மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் அமைச்சர்கள் குழு பிரதிநிதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜிஎஸ்டி அமைப்பு

தற்போது, இந்தியாவில் நான்கு அடுக்கு ஜிஎஸ்டி அமைப்பு உள்ளது - 5%, 12%, 18% மற்றும் 28%. அத்தியாவசியப் பொருட்களுக்குக் குறைவான வரியும், ஆடம்பரப் பொருட்களுக்கு அதிக வரியும் விதிப்பது இதன் முக்கிய கொள்கையாகும். ஏழைகள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான unpack செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், உப்பு, பால், புதிய காய்கறிகள், கல்வி மற்றும் சுகாதார சேவைகள் போன்றவற்றுக்கு பூஜ்ஜிய வரி விதிக்கப்படுகிறது.

12% வரி விதிப்பு அடுக்கில், கெட்டியான பால், மீன் முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் Caviar மற்றும் Caviar Substitutes, 20 லிட்டர் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர், வாக்கி டாக்கி, டாங்கிகள் மற்றும் பிற கவச வாகனங்கள், காண்டாக்ட் லென்ஸ்கள், சீஸ், பேரீச்சம்பழம் மற்றும் உலர் பழங்கள், உறைந்த காய்கறிகள், Sausages மற்றும் அதுபோன்ற இறைச்சி பொருட்கள், பாஸ்தா, ஜாம் மற்றும் ஜெல்லி, பழச்சாறு கலந்த பானங்கள், பூஜ்ஜியா உட்பட Namkeens, கறி பேஸ்ட், Mayonnaise, டூத் பவுடர், ஃபீடிங் பாட்டில்கள், தரைவிரிப்புகள், குடைகள், தொப்பிகள், சைக்கிள்கள், குறிப்பிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், பிரம்பு அல்லது மரத்தால் செய்யப்பட்ட அமைப்புகள், பென்சில்கள் மற்றும் கிரையான்கள், சாக்கு மற்றும் பருத்தியால் செய்யப்பட்ட கைப்பை மற்றும் ஷாப்பிங் பேக், ₹1,000 க்கும் குறைவான காலணிகள், Diagnostic Kits, மற்றும் மார்பிள் மற்றும் கிரானைட் ஆகியவை அடங்கும்.

12% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் சேவைகளில், குறிப்பிட்ட கட்டுமானப் பணிகள், ஒரு நாளைக்கு ₹7,500 வரை உள்ள ஹோட்டல் அறைகள், விமானம் மூலம் பயணிகள் செய்யும் போக்குவரத்து (Economy வகுப்பைத் தவிர), சில வகையான Multimodal போக்குவரத்து, மற்றும் குறிப்பிட்ட Professional, Technical மற்றும் Business சேவைகள் ஆகியவை அடங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+