எஸ்வி சேகர் கைலாசாவுக்கு போகப் போறாராமே! சாமியார் நித்யானந்தாவே சொல்லிவிட்டாரா? வீடியோவைப் பாருங்க!
சென்னை: பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி தலைமறைவாக இருக்கிறார் சாமியார் நித்யானந்தா. கைலாசா எனும் புதிய தேசத்தை உருவாக்கி அதில் வசித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், தற்போது திமுக ஆதரவாளராக இருக்கும் எஸ்வி சேகர் குறித்து நித்யானந்தா பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் இது மே மாதத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்கின்றனர் நித்யானந்தா ஆதரவாளர்கள்.
பாலியல் பலாத்காரம், கடத்தல், மோசடி என போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

நித்யானந்தா
அதற்குப் பிறகு நித்யானந்தா குறித்த தகவல்களை மக்கள் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று திடீரென நித்யானந்தா உடல்நிலை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களையும் மீடியாக்களையும் ஆக்கிரமித்தன. நித்யானந்தாவின் உறவினர் ஒருவர் இந்து மதத்திற்காக நித்யானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டார் என பேசியது பரபரப்பை கிளப்பியது. நித்யானந்தா உயிரிழந்து விட்டதாக பலரும் செய்தி பரப்பிய நிலையில் கைலாசா அதனை மறுத்தது.
எஸ்வி சேகர்
மேலும் நித்தியானந்தா ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் செயல்படக் கூடிய நிலையில் இருப்பதாகவும், கடந்த மார்ச் 30ஆம் தேதி யுகாதி விழாவில் பக்தர்களுக்கு ஆசி வழங்கிய வீடியோவையும் வெளியிட்டது. இந்த நிலையில் கைலாசவுக்கு தன்னை அழைக்கவில்லை என பாஜக முன்னாள் பிரமுகரும் தற்போது திமுக ஆதரவாளராக இருக்கும் நடிகர் எஸ்வி சேகர் கேட்டதாகவும் அதற்கு நித்யானந்தா பதிலளித்துப் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கைலாசா
இது தொடர்பாகப் பகிரப்பட்டு வரும் வீடியோவில் பேசியுள்ள சாமியார் நித்யானந்தா, "அன்புள்ள எஸ்வி சேகர் அவர்களுக்கு வணக்கம். ஏன் என்னை கைலாசாவுக்கு அழைக்கவில்லை என நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். 25 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் கொடுத்த ஒரு புகைப்படத்தை இன்றும் எனது பூஜை அறையில் நான் வைத்துப் பூஜித்து வருகிறேன். அதனைக் காண்பிப்பதற்காகவாவது நிச்சயம் உங்களை நான் கைலாசவுக்கு அழைப்பேன். தற்போது சில வேலைப்பளு, சமூகக் காரணங்களால் உங்களை கைலாசவுக்கு அழைத்து வர முடியவில்லை. அதே நேரத்தில் விரைவில் கைலாசவுக்கு நீங்கள் வருவீர்கள். அதற்கான அழைப்பு உங்களுக்கு அனுப்பப்படும்" எனப் பேசியிருக்கிறார்.
வீடியோ
தற்போது இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில் திமுக ஆதரவாளராக இருக்கும் எஸ்வி சேகர் நித்தியானந்தாவுடன் எப்படிப் பேசலாம் எனக் கேள்வி எழுப்புகின்றனர் வலதுசாரி ஆதரவாளர்கள். அதே நேரத்தில் இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல எனவும், கடந்த மே மாதம் நித்தியானந்தா பேசியதை தற்போது பேசியது போல சிலர் பரப்பி வருவதாக விளக்கம் அளித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications