நிவர் புயல் : விமான சேவைகள் ரத்து - விமான நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நிவர் புயல் பாதிப்பு காரணமாக தூத்துக்குடி சென்னை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை: நிவர் புயல் காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லக்கூடிய விமான சேவை நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் வழக்கம்போல் தூத்துக்குடி பெங்களூரு இடையிலேயான விமான சேவை நடைபெறும் என தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிவர் புயல் புதன்கிழமையன்ற மாலை காரைக்கால் புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புதுச்சேரிக்கு 370 கிமீ தொலைவிலும் சென்னைக்கு 420 கிமீ தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளதாகவும் அடுத்த சில மணிநேரங்களில் அதிதீவிரப் புயலாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்து, புறநகர் ரயில் சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லக்கூடிய விமான சேவை நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் வழக்கம்போல் தூத்துக்குடி பெங்களூரு இடையிலேயான விமான சேவை நடைபெறும் என தூத்துக்குடி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் 5 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலின் எதிரொலியாக மதுரை விமான நிலையத்தில் ஓடுதளங்களில் மழை நீர் தேங்காத வண்ணம் கழிவு நீர் கால்வாய் குழாய்களின் பழுதுநீக்கம் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான ஓடுத்தளங்கள் மற்றும் நிறுத்துமிடங்களில் அந்தந்த ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புயலின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் விமான நிலைய கட்டடத்தின் இலகுவான பாகங்களை வலுப்படுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications