சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தானே புயலின் வேகத்தை கூட நிவர் தாண்டும்- எப்பவும் எதுவும் நடக்கும்.. வெதர்மேன் "ஸ்பெஷல்" வார்னிங்!

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது, கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Tamilnadu Weatherman : கடைசி நேரத்தில் எதுவும் நடக்கும் | Oneindia Tamil

    தமிழகத்தை இன்று அல்லது நாளை நிவர் புயல் தாக்க உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்து உள்ளது.

    நிவர் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் புயல் தமிழகத்தில் சென்னை மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் வெளுத்து வாங்கும் மழை! முழு கொள்ளளவை எட்டப்போகிறது செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் வெளுத்து வாங்கும் மழை! முழு கொள்ளளவை எட்டப்போகிறது செம்பரம்பாக்கம் ஏரி

    தமிழ்நாடு வெதர்மேன்

    தமிழ்நாடு வெதர்மேன்

    இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் செய்துள்ள போஸ்டில், நிவர் புயல் தற்போது சென்னையில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ளது, கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம். டெல்டாவிற்கு கிழக்கு பகுதியிலும் இலங்கைக்கு மேலே வடகிழக்கு பகுதியில் இந்த புயல் மையம் கொண்டுள்ளது. காற்றின் வேகம் இங்கு ஏற்கனவே 100 கிமீரை நெருங்கிவிட்டது.

    கணிப்பு

    கணிப்பு

    கடைசி நேரத்தில் புயல் கரையை கடக்கும் பகுதி மாறுபடலாம். நிவர் புயலை கணிப்பது கடினமாக இருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சி மையங்களின் கணிப்புப்படி இந்த புயல் காரைக்கால் - பரங்கிப்பேட்டை இடையே கரையை கடக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் 24 மணி நேரத்தில் நிறைய மாற்றங்கள் நடக்கும்.

    நிறைய மாறும்

    நிறைய மாறும்

    கடைசி நேரத்தில் நிறைய மாறும். நிறைய கட்சித்தாவல்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த புயல் மொத்தமாக மேற்கு நோக்கி நகர்வதற்கு கொஞ்சம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்டா பகுதிகளை இந்த புயல் கண்டிப்பாக தாக்காது. டெல்டாவில் லேசான மழை பெய்யும் ஆனால் புயல் தாக்காது. இதனால் டெல்டா மக்கள் அச்சம் கொள்ள வேண்டியது இல்லை.

    புதுச்சேரி

    புதுச்சேரி

    நிவர் புயல் பெரும்பாலும் பாண்டிச்சேரி சென்னை இடையே கரையை கடக்கும் . மஹாபலிபுரம் - கல்பாக்கம் இடையே எங்காவது கரையாக கடக்கலாம். இன்று இரவு அல்லது நாளை காலை இந்த புயல் கரையை கடக்கும். மஹாபலிபுரத்திற்கும் - சென்னைக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை.

    சின்ன மாற்றம்

    சின்ன மாற்றம்

    இந்த புயலில் சின்ன மாற்றம் ஏற்பட்டு லேசாக வழி மாறினால் கூட சென்னையில் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த புயலை தடுக்கும் வகையில் காற்று மாற்றம் ஏற்படவில்லை என்றால்.. இந்த புயல் அதிக வேகம் பெறும். தானே புயலின் வேகத்தில் (140 கிமீ) அல்லது அதற்கும் அதிகமான வேகத்திலும் கூட இந்த புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது.

    வேகம்

    வேகம்

    இந்த புயல் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 100 கிமீ வேகத்தில் கூட காற்றும் வீசும். 26ம் தேதி காலை அதிக காற்று வீசும் .

    காற்று வீசும் வேகம்

    காற்று வீசும் வேகம்

    140 கிமீ - பாண்டிச்சேரி - மரக்காணம்- மஹாபலிபுரம் (இன்று இரவில் இருந்து நாளை காலை வரை)
    100 கிமீ- கடலூர் கடலோரம் (இன்று இரவு வரை)
    100 கிமீ - சென்னை கடலோரம் (நாளை காலை வரை)
    100 கிமீ - செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் (நாளை காலை வரை)
    80-90 கிமீ- ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவள்ளூர் (நாளை மதியம் வரை) பகுதியில் காற்று வீடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Nivar Storm: Tamilnadu Weatherman gives special updates on the cyclone that will pass today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X