சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரையை கடந்த நிவர்.. களத்திற்கே செல்லும் முதல்வர் இபிஎஸ்.. இன்னும் 4 மணி நேரம்தான்.. பக்கா பிளான்!

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் தற்போது தமிழக முதல்வர் பழனிசாமி புயல் சேத பகுதிகளை ஆய்வு செய்ய செல்கிறார்.

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. அதிகாலை 2.30 மணிக்கு மரக்காணம் மற்றும் புதுச்சேரி இடையே கரையை கடந்தது.

இந்த புயல் கரையை கடக்கும் போது 143 கிமீ வேகத்தில் காற்று வீசியது. அதி தீவிர புயலாக வந்து நிவர் தமிழகத்தை தாக்கியது.

 அந்த 6 மணி நேரம்.. லேசாக மாறிய நிவர்.. கடைசி நேர டிவிஸ்ட்.. புயல் கரையை கடக்கும் போது நடந்தது என்ன? அந்த 6 மணி நேரம்.. லேசாக மாறிய நிவர்.. கடைசி நேர டிவிஸ்ட்.. புயல் கரையை கடக்கும் போது நடந்தது என்ன?

தாக்கியது

தாக்கியது

இந்த நிவர் புயல் காரணமாக வடமாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளுவர், விழுப்புரம், சென்னை, வேலூர், கடலூர் மாவட்டங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வடமாவட்டங்களில் புயல் காரணமாக மரங்கள் விழுந்துள்ளது .சாலைகளில் மழையால் தண்ணீர் தேங்கி உள்ளது.

குறைந்தது

குறைந்தது

ஆனால் இந்த புயல் காரணமாக நினைத்ததை குறைவான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது. நிவர் காரணமாக மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்கள் மட்டும் கொஞ்சம் அதிகமாக பாதிப்பு அடைந்துள்ளது.

காரணம்

காரணம்

இந்த புயல் காரணமாக பெரிய அளவில் சேதங்கள் ஏற்படாத வகையில் தமிழக அரசு முறையாக திட்டமிட்டு இருந்தது. அதிகாரிகள் சரியான நேரத்தில் பணியாற்றியது, வானிலை மையத்தின் உடனுக்குடனான துல்லியமான தகவல் பரிமாற்றம் என்று இதற்கு பின் நேற்று மிகப்பெரிய குழுவே இயங்கி உள்ளது. முக்கியமாக சென்னையில் வெள்ளம் ஏற்படாத வகையில் சிறப்பாக திட்டமிட்டு இருந்தனர்.

மக்கள்

மக்கள்

மக்களுக்கு உரிய நேரத்தில் அறிவுரை வழங்கியது. புயலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. புயலுக்கு பின் ஏற்படும் சேதங்களை சரி செய்ய ஏற்பாடு செய்தது என்று தமிழக முதல்வர் இதற்காக சரியாக திட்டங்களை வகுத்து இருந்தார். இதற்கு முன் வந்த கஜா போன்ற புயல்களில் பாடம் கற்ற அரசு இப்போது மிக சரியாக செயல்பட்டுள்ளது.

Recommended Video

    Nivar எப்படி கரையை கடந்தது? | Nivar Cyclone | Oneindia Tamil
    செல்கிறார்

    செல்கிறார்

    இதனால் 143 கிமீ வேகத்தில் புயல் தாக்கியும் எதிர்பார்த்ததை விட குறைவான சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் தற்போது தமிழக முதல்வர் பழனிசாமி புயல் சேத பகுதிகளை ஆய்வு செய்ய செல்கிறார். இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலூர் செல்ல உள்ளார். இன்னும் 4 மணி நேரத்தில் கடலூர், மரக்காணம் பகுதிகளை முதல்வர் பார்வையிட உள்ளார்.

    English summary
    Nivar Storm: TN CM Edappadi Palanisamy to meet affected areas in Cuddalore
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X