சென்னையில் நடக்கும் கார் ரேஸுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.. நிவேதா பெத்துராஜ் மறுப்பு
சென்னை: சென்னையில் கார் பந்தயத்தில் தொடர்பு என என்னை பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. அவை ஒன்றும் உண்மை இல்லை என்று நடிகை நிவேதா பெத்துராஜ் மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: அண்மையில் எனக்காக பணம் செலவிடப்பட்டதாக தவறான செய்திகள் பரவி வருகின்றன. இப்படியான தகவல்களை பரப்பும் சிலர் மனிதாபிமானத்துடன் தகவலை பரப்புவதற்கு முன்னர் சரிபார்த்துவிடுவார்கள் என்று நினைத்துதான் நான் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்தேன்.

கடந்த சில நாட்களாக பரவும் பொய் செய்தியால் நானும் எனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளோம். இது போன்ற தவறான செய்திகளை பரப்பும் முன்பு யோசித்து பாருங்கள். நான் கண்ணியமான குடும்பத்தை சேர்ந்தவர். எனது 16 வயது முதலேயே நான் பொருளாதார ரீதியாக யாரையும் சார்ந்திருக்காமல் இருந்து வருகிறேன்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக துபாயில் வாடகை வீட்டில் நான் எனது குடும்பத்தினருடன் இருந்து வருகிறேன். திரைப்படங்களில் கூட நான் இதுவரை எநத் தயாரிப்பாளர்களிடமோ இயக்குநர்களிடமோ கதாநாயகன்களிடமோ பட வாய்ப்பு கொடுங்கள் என கேட்டது கிடையாது. இதுவரை 20 படங்களில் நடித்திருக்கிறேன். அவை எல்லாமே என்னை தேடி வந்த வாய்ப்புகள்தான். நான் யாரையும் தேடி போகவில்லை.
நான் ஒரு போதும் பணத்திற்காகவோ வேலைக்காகவோ பேராசையுடன் இருந்தது கிடையாது. 2002ஆம் ஆண்டு முதல் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். 2013 ஆம் ஆண்டு கார் பந்தயத்தில் விருப்பத்தின் பேரில் நான் ஈடுபட்டு வருகிறேன். அதிலும் சென்னையில் நடக்கும் போட்டிகள் குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. நான் என்னை பற்றி பேசப்படும் செய்திகள் எதுவுமே உண்மையில்லை, வதந்தி என்பது அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் நினைப்பது போல் இல்லை. நான் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களுக்கு பிறகு நான் ஒரு நல்ல இடத்திற்கு வந்திருக்கிறேன். தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையையே வாழ விரும்புகிறேன். அதுவும் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை போல்! இதை நான் சட்டரீதியாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை.
பத்திரிகைத் துறையில் மனிதம் மீதம் இருக்கிறது என நம்புகிறேன். பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வரும் செய்திகளை சரி பார்த்துவிட்டு பிரசுரம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்தை மேலும் மனஉளைச்சலுக்குள்ளாகாதீர்கள். எனக்காக இதுவரை ஆதரவு தெரிவித்து கருத்துகளை பேசியவர்களுக்கு நன்றி. வாய்மை வெல்லும். இவ்வாறு நிவேதா பெத்துராஜ் விளக்கமளித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications