Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறி வச்சிட்டாரே! மொத்த டார்கெட்டும் திமுக தான்.. அதிமுக, பாஜக பக்கமே திரும்பாத விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய், இன்று நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் திமுகவை மட்டுமே தாக்கிப் பேசினார். முன்பு பாஜக, அதிமுகவையும் சீண்டி வந்த விஜய், இன்றைய கூட்டத்தின் முழு பேச்சிலும் திமுகவை மட்டுமே குறி வைத்து விமர்சித்தார்.

கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அதன்பிறகு அவரது பிரச்சார பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது. கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தொடங்கி உள்ளார்.

No Attacks on BJP or AIADMK Today- TVK Vijay Aims Entire Speech at DMK

விஜய் மீட்டிங்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த மக்கள் சந்திப்பு முற்றிலும் உள் அரங்கில் நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 2,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுக்கு QR குறியீட்டுடன் கூடிய நுழைவு சீட்டு வழங்கப்பட்டிருந்தது. பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய், ஆளுங்கட்சியான திமுகவை மிக கடுமையாக விமர்சித்தார். விஜய் பேசுகையில், "அண்ணா தொடங்கிய கட்சியைக் கைப்பற்றியவர்கள் இன்று என்னவெல்லாம் செய்கிறார்கள். தனிப்பட்ட வகையில் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எந்த வாய்க்கால் வரப்பு தகராறும் கிடையாது. அவர்கள் நம்மிடம் வன்மத்தோடு இருக்கலாம். ஆனால், நாம் அப்படி கிடையாது.

திமுக மீது விஜய் தாக்கு

என்னை, உங்களை, மக்களை, நம்மையெல்லாம் பொய் சொல்லி நம்பவைத்து ஏமாற்றி வாக்கு பெற்றார்கள். இப்போது ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல நடிக்கிறார்கள், நாடகம் ஆடுகிறார்கள். அவர்களை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்? அவர்களைக் கேள்வி கேட்காமல் விடப்போவது இல்லை.

மக்களிடம் செல்' என்ற அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றி மக்களுடன் பயணிக்கிறோம். ஆனால், அவர்கள் அண்ணாவை மறந்துவிட்டார்கள். நமக்கு கொள்கையில்லை என்று தமிழ்நாட்டு முதல்வர் சொல்கிறார். நமக்கு கொள்கை இல்லை என்று தமிழக முதலமைச்சர் சொல்கிறார்.

விஜய் அட்டாக்

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தத்துவத்தை நமது கட்சியின் அடிப்படை கோட்பாடாக அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா? சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? சி.ஏ.ஏ அறிவிப்பை எதிர்த்த நமக்கு, வக்பு சட்டத்தை எதிர்த்த நமக்கு கொள்கை இல்லையா?

நீட்டை ஒழித்துவிடுவோம் என்று கதை விடாமல், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொன்னதோடு, அதற்கு ஒரு இடைக்கால தீர்வையும் சொன்ன நமக்கு கொள்கை இல்லையா? இவர்கள் மட்டும்தான் எல்லா கொள்கையையும் குத்தகைக்கு எடுத்தது போல் பேசுகிறார்கள். தி.மு.க.வின் கொள்கையே கொள்ளைதான். இதெல்லாம் மக்களுக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டார்களா? இன்னும் நாங்கள் அடிக்கவே தயாராகவே இல்லை. அதற்குள்ளாக அலறினால் நாங்கள் என்ன செய்வது?

தற்குறிகள் அல்ல

நமது கட்சித் தொண்டர்களை தற்குறிகள் என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய எம்.எல்.ஏ ஒருவரே அவர்களை தற்குறிகள் என்று சொல்லாதீர்கள், அவர்கள் சங்கிகள் இல்லை என்று ஆதரவுக்குரல் கொடுத்திருக்கிறார். இப்படிக் குரல் கொடுத்தவர் த.வெ.க-வின் கொள்கை வழிகாட்டி தலைவர்களில் ஒருவரான அஞ்சலை அம்மாவின் சொந்தக்காரர்.

யாரைப்பார்த்து தற்குறி என்கிறீர்கள்? இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தான் உங்கள் அரசியலை கேள்விக்குறி ஆக்கப்போகின்றனர். அவர்கள் தற்குறி அல்ல, ஆச்சர்யக்குறிகள். மாற்றத்துக்கான அறிகுறி. நீங்கள் சொல்லும் தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, வாழ்நாள் முழுவதும் விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்கள் அரசியலேயே கேள்விக்குறியாக்க போகிறார்கள். இந்த போட்டி எப்படி இருக்க போகுது என்றால், மக்களுக்காக மக்களோடு மக்களாக இருக்கும் நம்மளை மக்களே தேர்வு செய்ய போகிறார்கள். ஆல்ரெடி தேர்வு செய்தாச்சு" எனப் பேசினார்.

பாஜக, அதிமுகவை சீண்டாத விஜய்

தவெக தலைவர் விஜய் தனது உரையில் மத்திய அரசு, பாஜக, அதிமுக குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. தனது முழு உரையிலும் திமுக அரசையே தனது முக்கிய எதிரியாக முன்வைத்து மிகக் கடுமையாக விமர்சித்தார். முன்பு நடந்த பிரச்சார கூட்டங்களிலும், மாநாட்டிலும் பாஜக மற்றும் அதிமுகவையும் விமர்சித்தார் விஜய். தற்போது திமுகவை மட்டுமே டார்கெட் செய்து அடித்துள்ளார்.

வரும் சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி எனக் கூறி வரும் விஜய், அதற்கேற்ற வகையில், திமுகவை மட்டுமே இன்று தாக்கிப் பேசியுள்ளார். திமுகவே தமது பிரதான எதிரி என்று விஜய் தீர்மானித்துவிட்டதையே அவரது இன்றைய பேச்சு தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது.

முன்பு அதிமுக மீது அட்டாக்

மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய். "பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. அந்தக் கூட்டணிக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மக்கள் சக்தியே நம்முடன் அணி அணியாகத் திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதுக்கு? நம்முடைய கூட்டணி சுயமரியாதை கூட்டணியாக இருக்கும்.

எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் வேதனையுடன் தவிக்கிறார்கள்." என அதிமுகவை விமர்சித்துப் பேசி இருந்தார் விஜய்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+