தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை என சென்னை ஹைகோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் ஆன லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவ - மாணவியர் ஆபாச இணைய தளங்களை காணக் கூடும் என அச்சம் தெரிவித்து, ஆன் லைன் வகுப்புக்களுக்கு தடை கோரி சரண்யா, பரணீஸ்வரன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசு, ஆன் லைன் வகுப்புக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுத்தது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் விதிகளை அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் வகுப்பு வாரியாக மாணவர்களுக்கான ஆன் லைன் வகுப்புக்கள் நடத்தும் நேரமும் அறிவிக்கப்பட்டது.

4 வகுப்புகள்

4 வகுப்புகள்

1-ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகளும், 9 ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புகள் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு விசாரித்தது.

உரிய விதிகள்

உரிய விதிகள்

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களை காண நேரிடும் எனவும் இதை தடுக்க உரிய விதிகளை வகுக்கும் வரை ஆன் லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டனர்.

ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள்

மத்திய அரசுத் தரப்பில், டிஜிட்டல் கல்வி நோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது எனவும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது. ஆன் லைன் வகுப்புக்களுக்கான விதிகளை பின்பற்றாத பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் அப்பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆபாச இணையதளம்

ஆபாச இணையதளம்

மனுதாரர்கள் மட்டுமல்லாமல், பள்ளிகள் தரப்பிலும், ஆன்லைன் வகுப்புக்கள் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களை காண நேரிடும் எனவும் இதை தடுக்க உரிய விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.

வகுப்புகள்

வகுப்புகள்

இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தமிழகத்தில் தடை விதிக்க முடியாது என கூறி வழக்கை முடித்து வைத்தனர். மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு

மத்திய, மாநில அரசு

ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ஆன்லைன் வகுப்பு நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும். பெற்றோர் - ஆசிரியர் கலந்துரையாடல் இருக்க வேண்டும்.

14 வழிகாட்டுதல்கள்

14 வழிகாட்டுதல்கள்

மாவட்ட தலைமையகத்தில் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். வழிகாட்டுதலை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 வழிகாட்டுதல்கள் பிறபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+