என்னங்க சொல்றீங்க.. பென்சன் குறையப் போகுதா? 8வது ஊதியக்குழு என்ன சொல்கிறது? மத்திய அரசின் விளக்கம்!
சென்னை: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களைச் சுற்றி கடந்த சில மாதங்களாக 8வது ஊதியக்குழு (8th Pay Commission) குறித்து பல்வேறு ஊகங்கள் பரவி வந்தன. குறிப்பாக ஓய்வூதிய விதிகளில் மாற்றம் வருமா? தற்போதைய ஓய்வூதிய முறை நீடிக்குமா? என்பதுதான் பெரும்பாலான 69 லட்சம் ஓய்வூதியதாரர்களின் முக்கிய கேள்வியாக இருந்தது. இந்நிலையில், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள பதில், ஓய்வூதியதாரர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
பிப்ரவரி 9, 2026 அன்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவையில் 8வது ஊதியக்குழு மற்றும் ஓய்வூதிய விதிகள் தொடர்பாக நேரடி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி.
இதுதொடர்பான விவாதத்தில் பேசிய அவர், "ஓய்வூதியதாரர்களிடையே எந்தவித பாகுபாடும் காட்ட அரசாங்கத்துக்கு நோக்கம் இல்லை. தற்போதைய விதிகளில் மாற்றம் செய்யப்படவில்லை" என்று தனது பேச்சினிடையே தெளிவுபடுத்தியுள்ளார்.

8வது ஊதியக்குழு
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், நிதி அமைச்சகத்தின் கீழ் அமலில் உள்ள தற்போதைய விதிகளின்படியே தொடரும் என்றும் அவரது பேச்சின் வாயிலாக மத்திய அரசாங்கம் தெளிவாக விளக்கியுள்ளது. குறிப்பாக, சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நிதிச் சட்டம் 2025 குறித்து ஏற்பட்ட குழப்பத்திற்கும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்தச் சட்டம் புதிய ஓய்வூதிய விதிகளை கொண்டு வரவில்லை எனவும், ஏற்கனவே இருந்த சட்டப் பிரிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் மட்டுமே திருத்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
பங்கஜ் சவுத்ரி
மேலும், சிவில் மற்றும் பாதுகாப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தில் எந்தவித குறைப்பும் செய்யப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் தொடர்ந்து இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்தே (Consolidated Fund of India) வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவுள்ள 8வது ஊதியக்குழு தொடர்பாக அரசாங்கம் அளித்த தகவலின்படி, இந்த ஆணையம் நவம்பர் 3, 2025 அன்று முறையாக அமைக்கப்பட்டது. ஆணையத்துக்கு தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க 18 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் வருதுல்ல..ஆதார் கார்டுக்கு ரூ.50,000 கடன்! மத்திய அரசின் பலே திட்டம்..வெளியான குஷி அறிவிப்பு
ஓய்வூதிய விதிகள்
அதாவது, இறுதி அறிக்கை வர இன்னும் கால அவகாசம் உள்ளது. அந்த அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின், மத்திய அரசு அதை ஆய்வு செய்து, ஏற்றுக் கொண்ட பின்னரே சம்பளம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட திருத்தங்கள் அமலுக்கு வரும். அதுவரை, தற்போதைய ஓய்வூதிய முறை மாற்றமின்றி தொடரும். டிசம்பர் 31, 2025 அன்று அல்லது அதற்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் இதே விதிகள் பொருந்தும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
69 லட்சம் ஓய்வூதியதாரர்கள்
ஓய்வூதிய திருத்தங்கள் தானாக அமலுக்கு வராது; அவை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவின் பேரிலேயே நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியின் பதிலை முழுமையாக ஆராய்ந்து பார்க்கும் போது, 8வது ஊதியக்குழு அறிக்கை வரும் வரை ஓய்வூதியத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஓய்வூதியக் குறைப்பு என்ற கேள்விக்கே இடம் இல்லை என்று மத்திய அரசு தெளிவாக விளக்கமளித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள 69 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தியாக பார்க்கப்படுகிறது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications