இரண்டு வாரம் ஓவர்... பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை.. காரணம் இதுதான்
சென்னை: தேர்தல் நெருங்குவதால் கடந்த இரண்டு வார காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றும் ஏற்படவில்லை.
இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 93.11 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல டீசல் ஒரு லிட்டருக்கு 86.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 91.17 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் ஒரு லிட்டர் 81.47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் காரணமாகக் கடந்த சிவ மாதங்களாகவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை ரூ.100ஐயும் தாண்டியும் விற்பனையானது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதால் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. அதன்பின்னர் கடந்த இரண்டு வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஒரு லிட்டர் பெட்ரோல் 93.11 ரூபாய்க்கும், டீசல் 86.45 ரூபாய்க்குமே விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் தற்போது கச்சா எண்ணெய் பேரலுக்கு 66 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது கடந்த மாதத்தைவிட அதிகம் என்றாலும்கூட விரைவில் நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications