2 நாட்களுக்கு பிறகு.. சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!
சென்னை: சென்னையில் 2 நாட்கள் கழித்து இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 137 நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்தது ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது.

பெட்ரோல், டீசல் விலை
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

விலை குறைந்தது
தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது.

வெற்றிகரமான 137 நாள்கள்
இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 137வது நாளாக சென்னையில் கடந்த சில தினங்கள் வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வந்தது. பல்க் டீசல் விலை ரூ 25 ஆக உயர்ந்த போதும் சில்லறை விற்பனையில் டீசல் விலை உயராமல் இருந்தது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
உக்ரைன்- ரஷ்யா போரால் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 120 டாலர்கள் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. 5 மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே விலையேற்றப்படவில்லை என விவாதிக்கப்பட்டது. ஆனால் அந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்து பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையிலும் 137 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

மக்களுக்கு பேரிடி
இந்த நிலையில் பொதுமக்களுக்கு பேரிடியாக நேற்றைய தினம் சென்னையில் பெட்ரோல் டீசல் , வீட்டு உபயோக சிலிண்டர் உயர்ந்துள்ளது. சென்னையில் சுமார் நான்கரை மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் 76 காசுகள் உயர்த்தியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 117 டாலர் ஏற்றத்தால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எவ்வளவு?
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 102.16 க்கு விற்பனையாகிறது. அது போல் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 76 காசுகள் உயர்ந்து ரூ 92.19க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயருமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையும் ரூ 50 உயர்ந்து ரூ 967.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Recommended Video

இரண்டாவது நாளாக உயர்வு
சென்னையில் இரண்டாவது நாளாக பெட்ரோல் டீசல் விலையை நேற்று எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலை 75 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ 102.91 க்கு விற்பனையானது. அது போல் டீசல் விலை 76 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ 92.95 க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 1.51 காசுகளும் டீசல் விலை லிட்டருக்கு ரூ 1.52 காசுகளும் உயர்ந்தன. இந்த நிலையில் இன்றைய தினம் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு












Click it and Unblock the Notifications