முழுப்பொய்.. ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் இல்லவே இல்லை.. அமைச்சர் மனோ தங்கராஜ் கொடுத்த விளக்கம்!
சென்னை : ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படவில்லை என்றும், அது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே ஆவின் பால் பண்ணையில் விதிகளை மீறி சிறார்கள் பணியமர்த்தப்பட்டதாகவும், அவர்களுக்கு சரிவர ஊதியமும் வழங்கப்படாததால் சிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. இதனையடுத்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "அம்பத்தூர் ஆவின் பால் கொள்முதல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட சிறார்கள், குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக இன்று பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை.
மத்திய அரசின் சிறார்கள் வேலை செய்வதை தடுக்கின்ற சட்டத்தின்படி 14 வயதிற்கு உட்பட்டவர்கள் குழந்தைகள் தீங்கு விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைகளில் பணிபுரியக்கூடாது. ஆவின் தீங்கு விளைவிக்கக்கூடிய தொழிற்சாலை இல்லை. அப்படியிருந்தும் கூட அம்பத்தூர் ஆவின் பண்ணையில் 14 வயதிற்கு உட்பட்டவர்கள் யாருமே பணி புரியவில்லை. இது அப்பட்டமான பொய்.
இங்கு ஒப்பந்த அடிப்படையின்படி வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அந்த ஒப்பந்ததாரர்களுக்கும், பணிபுரியும் ஒரு சிலருக்கும் இடையே ஏதோ கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. அதன் விளைவாக சிலர் பிரச்சனை உருவாக்கி, அது மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற செய்திகள் வரும்போது அதன் உண்மைத்தன்மையை ஊடகத்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும். உண்மை தன்மையை அறிந்த பின்னரே செய்திகளை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஆவின் என்பது அரசு பொதுத்துறை நிறுவனம். நான் அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக போட்ட உத்தரவு, ஆவினில் பணியாற்றுகின்ற ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருமே நிர்ணயித்திருக்கக் கூடிய ஊதியத்தை ஒப்பந்ததாரர்கள் அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அவர்களுக்கு பி.எஃப், இ எஸ் ஐ போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் உத்தரவிட்டேன்" எனத் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications