கோ பேக் மோடி டிரெண்ட் செய்தால் கைதா? கமிஷ்னர் "அப்படி" சொல்லலை! பரவிய பொய் செய்தி! டிஆர்பி பாய்ச்சல்
சென்னை: தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வரும் நிலையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் சொன்னதாக பொய்யான செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மிக பிரம்மாண்ட அளவில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்த வருடம் தமிழ்நாட்டில் நடக்க உள்ளது.
நாளை காலை 10 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் இந்த தொடர் தொடங்க உள்ளது. இதற்காக பிரதமர் மோடி நாளை சென்னைக்கு வருகிறார்.

மோடி சென்னை
நாளை மாலை 6 மணி அளவில் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் தொடக்க விழா நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்கிறார். தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வரும் நிலையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் சொன்னதாக பொய்யான செய்திகள் சில ஊடகங்களில் வெளியானது. மோடிக்கு எதிராக போஸ்ட் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

கைது
அவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்று சங்கர் ஜிவால் சொன்னதாக பொய்யான செய்திகள் வெளியானது. ஆனால் உண்மை ஆணையர் சங்கர் ஜிவால், கைது செய்யப்படுவது பற்றி எதுவுமே சொல்லவில்லை. நேற்று செய்தியாளர் சந்திப்பில்.. மோடிக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டம் செய்வதாக சொல்லி இருக்கிறார்களே.. போலீஸ் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்க போகிறது என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஜிவால் என்ன சொன்னார் ?
இதற்கு பதில் அளித்த சங்கர் ஜிவால்.. வர வர நிலைமை எப்படி இருக்கிறது என்று கண்காணிப்போம். என்ன மாதிரியான முயற்சிகள் மோடி வருகைக்கு எதிராக செய்யப்படுகிறது என்று கண்காணிப்போம். சமூக வலைத்தளங்கள், ஆன்லைன், ஆப்லைன் எல்லாம் கண்காணிக்கப்படுகிறது என்று சங்கர் ஜிவால் கூறினார். ஆனால் சங்கர் ஜிவால் எங்கும் மோடி வருகையை எதிர்ப்போரை கைது செய்வோம் என்று கூறவில்லை.

டிஆர்பி எதிர்ப்பு
இந்த நிலையில்தான் திமுக எம்எல்ஏவும், ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா இது பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். சில ஊடகங்களில் வந்த பொய்யான செய்திகளின் அடிப்படையில் கோ பேக் மோடி டிரெண்டாகி வருகிறது. சென்னை போலீஸ் சொன்னதாக பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்கள். தமிழ்நாடு போலீஸ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொய்யான செய்தியை உருவாக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,.. என்று டிஆர்பி ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications