அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்.. அதிமுக கடும் அமளி! சட்டசபையில் இருந்து வெளிநடப்பு
சென்னை: கே என் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய 3 அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களையும், மதங்களையும் ஆபாசமாக பேசியதற்காக அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி துறையில் நடைபெற்ற ஊழலுக்காக அமைச்சர் கே.என். நேரு மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக கடிதம் அளித்துள்ளது.

இன்று காலை சட்டப்பேரவை கூடியதும் அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். விதி என் 72 ன் கீழ் சபாநாயகர் அனுமதி கொடுத்தால் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று அவை முன்னவர் துரைமுருகன் கூறினார்.
இதையடுத்து அதிமுக கொடுத்த கடிதம் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என சபாநாயகர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிமுக எம் எல் ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த பிறகு சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- "அதிமுக சார்பில் பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தராததை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்" என்றார். அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்த போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை கால்வாய் சீரமைப்பு தொடர்பான கவனம் ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசி வருகிறார்.
-
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா?












Click it and Unblock the Notifications