முதல்வர் ஸ்டாலினின் தனி செயலர் உமாநாத் ஐஏஎஸ்க்கு எதிரான மனு தள்ளுபடி.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக முதலமைச்சர் ஸ்டாலினின் தனிச் செயலர் உமாநாத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படுவதாக உமாநாத் மீது நடவடிக்கை எடுக்க எந்த ஆதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மார்ச் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு நிர்வாக வசதிக்காக, சில மாவட்டங்களின் ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமைச் செயலரை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.

இதற்கிடையே, முதலமைச்சரின் தனிச் செயலர் உமாநாத், தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி, பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
"தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் முதல்வரின் தனிச் செயலராக பதவி வகித்து வரும் ஐஏஎஸ் அதிகாரியான உமாநாத், தன்னிச்சையாக தனக்கு கீழ் பணிபுரியும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
மேலும், "தேர்தலுக்காக பல ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சரின் தனிச் செயலராக உள்ள உமாநாத் ஐ.ஏ.எஸ்ஸை மட்டும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கக்கூடாது. அனைத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் தேர்தல் பணியில் இருக்கும்போது முதலமைச்சரின் தனிச் செயலாளர் எந்த அடிப்படையில் செயல்படுகிறார் என்பதை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்." என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில், உமாநாத்துக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் மனுதாரர் முன்வைக்கவில்லை என்றும், தேர்தல் நடத்தை விதிகளை மீறி அவர் செயல்பட்டார் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உமாநாத் ஐஏஎஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மோகன்தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications