நோ எக்ஸ்ட்ரா சீட்.. சொன்னது சொன்னது தான்! ஸ்டிரிக்டாக சொன்ன ஸ்டாலின்! அடைக்கப்பட்ட அறிவாலய கதவுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், கூடுதல் தொகுதிகள் வழங்க முடியாது என்ற திமுக தலைமையின் நிலைப்பாடு, கூட்டணி கட்சிகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2019ல் திமுக கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் களமிறங்கியது, பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக அதே வலுவான கூட்டணியை அமைத்து களமிறங்கியது. அப்போது திமுக 173 தொகுதிகளில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றியது.

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல சிறிய மற்றும் நடுத்தர கட்சிகளுக்கு திமுக கணிசமான தொகுதிகளை ஒதுக்கியிருந்தது.

mk stalin DMK Tamil Nadu Assembly Election 2026

திமுக கூட்டணி

இந்த முறை, ஆளும் கட்சி என்ற பலத்துடன் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் திமுக, தனது கூட்டணியை மேலும் விரிவுபடுத்த முயற்சி செய்து வருகிறது. அதன்படி, நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. மேலும், தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தேமுதிக தொடர்பாக, நீண்ட காலமாக இழுபறி நிலவி வந்த நிலையில், அந்தக் கட்சி திமுக கூட்டணியில் இணையும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்டாலின் சீட் பங்கீடு

தேமுதிகவுக்கு 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படும் என பேச்சுகள் வெளியாகி வருகின்றன. இதேபோல், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மக்கள் நீதி மய்யத்துக்கு அப்போது சட்டப்பேரவைத் தொகுதிகள் வழங்கப்படவில்லை. ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது கமல்ஹாசன் எம்.பி.யாக உள்ளார். இந்த நிலையில், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கோரி மக்கள் நீதி மய்யம் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்

கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், நிர்வாகிகளை தேர்தல் களத்தில் இறக்கவும் இது அவசியம் என கமல்ஹாசன் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், திமுக தரப்பில் மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட சில சிறிய கட்சிகளையும் கூட்டணிக்குள் கொண்டுவருவது குறித்து திமுக ஆலோசனை நடத்தி வருகிறது. அவ்வாறு இணைத்தால், 1 அல்லது 2 தொகுதிகள் வழங்கலாமா என்ற கணக்கீடும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணி

இந்த சூழ்நிலையில், ஏற்கனவே திமுக கூட்டணியில் நீண்ட காலமாக இருந்து வரும் கட்சிகள், இந்த முறை கூடுதல் தொகுதிகள் அல்லது குறைந்தபட்சம் இரட்டை இலக்க தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி 'ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பது திமுக தலைமையிடத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய்

ஆனால், நடிகர் விஜய் அரசியலில் தீவிரமாக களமிறங்கியுள்ள சூழலில், எந்தவித ஆபத்தையும் எடுத்துக் கொள்ள விரும்பாத திமுக, கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட அதே தொகுதிகளையே கூட்டணி கட்சிகளுக்கு மீண்டும் ஒதுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவு, கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, புதிய கட்சிகளை கூட்டணிக்குள் சேர்ப்பதை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து, அதன் பின்னர் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அறிவாலயம் அரசியல்

முதற்கட்டமாக, தேசிய கட்சியான காங்கிரசுடன் தொகுதி பங்கீட்டை இறுதிப்படுத்த திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது. காங்கிரசுடன் பேச்சுவார்த்தை முடிந்ததும், மற்ற கூட்டணி கட்சிகளுடனும் திமுக தொடர்ச்சியான பேச்சுகளை நடத்தும் என தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில், தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பான அனைத்து பணிகளையும் முடித்து, அதன் பின்னர் முழுமையாக பிரச்சார களத்தில் இறங்க திமுக தலைமை திட்டமிட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+