ஜூன் 1 முதல் இந்த வசதி கிடையாது.. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு
சென்னை: ஜூன் 1 முதல் நங்கநல்லூர் சாலை மெட்ரோ இரயில் நிலையத்தில் இலவச வாகன நிறுத்தம் வசதி இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ பயண அட்டை அல்லது டிஜிட்டல் கட்டண முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் வாகன நிறுத்தம் செய்து கொள்ளலாம் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகளின் வாகன நிறுத்தும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சமீபத்தில் நங்கநல்லூர் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ள இருசக்கர நான்கு சக்கர வாகன நிறுத்தும் இடத்தை திறந்துள்ளது, இந்த விரிவுபடுத்தப்பட்ட வாகன நிறுத்தும் இடத்தில் 1000 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 60 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும்.
நங்கநல்லூர் சாலை மெட்ரோ வாகன நிறுத்தம் இடத்தில் 28.04.2023 வரை மெட்ரோ பயணிளுக்காக இலவசமாக வாகன நிறுத்தும் வசதி இயக்கப்பட்டது.

இந்நிலையில் மே மாதம் முடிவடைவதால் ஜூன் 1, 2023 முதல் சென்னை மெட்ரோ இரயில் பயண அட்டை அல்லத டிஜிடடல் கட்டண முறைகள் மூலம் பார்க்கிங் கட்டணத்தை செலுத்தி இனிமேல் பயணிகள் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்" இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications