சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரமான ஈரோடு.. டெல்டாவில் சூரியன் சுளீர்! ரெஸ்ட் எடுக்கும் மழை - அடுத்து என்ன? வெளியான வானிலை அப்டேட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சற்றுமுன் வெளியான வானிலை அறிக்கையில், தெரிவித்து உள்ளதாவது, "கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை முதல் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

உருவாகும் சக்கரம்.. 2 நாள் 18 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. சென்னை நிலவரம் என்ன? வெதர் அப்டேட் உருவாகும் சக்கரம்.. 2 நாள் 18 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. சென்னை நிலவரம் என்ன? வெதர் அப்டேட்

தாழ்வு நிலை இல்லை

தாழ்வு நிலை இல்லை

டிசம்பர் ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது தொடர்பான இந்த அறிக்கையில் வானிலை மையம் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

சென்னை வானிலை

சென்னை வானிலை

அதே நேரம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

 லேசான மழை

லேசான மழை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

 மழை அளவு

மழை அளவு

கொடிவேரி (ஈரோடு) 12, PWD மாக்கினாம்பட்டி, (கோவை), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு) தலா 8, சத்தியமங்கலம் (ஈரோடு), பொள்ளாச்சி (கோவை), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி) தலா 6, கீழ் கோதையார் ARG (கன்னியாகுமரி), சோத்துப்பாறை (தேனி) தலா 5, பவானிசாகர் (ஈரோடு), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 4, அன்னவாசல் (புதுக்கோட்டை), குன்னூர் PTO (நீலகிரி), KCS கடவனூர் (கள்ளக்குறிச்சி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), ஆத்தூர் (சேலம்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), சூரலக்கோடு (கன்னியாகுமரி), கல்லிக்குடி (மதுரை)), திருமங்கலம் (மதுரை) தலா 3, சிதம்பரம் AWS (கடலூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), கங்கவல்லி (சேலம்), குன்னூர் (நீலகிரி), மணியாச்சி (தூத்துக்குடி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பெரியார் (தேனி), சங்கரிதுர்க்கம் (சேலம்), கோவில்பட்டி (தூத்துக்குடி), ஆழியார் (கோவை), ராசிபுரம் (நாமக்கல்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), விருதுநகர் தலா 2, தூத்துக்குடி, பெரியகுளம் (தேனி), அண்ணாமலை நகர் (கடலூர்), போடிநாயக்கனூர் (தேனி), பரங்கிப்பேட்டை (கடலூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கிண்ணக்கொரை (நீலகிரி), கெத்தை (நீலகிரி), ராதாபுரம் (திருநெல்வேலி), பரலியார், வேப்பந்தட்டை (பெரம்பலூர்), சின்னக்கல்லார் (கோவை), சூரங்குடி (தூத்துக்குடி), புதுச்சத்திரம் (நாமக்கல்), நத்தம் (திண்டுக்கல்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), குந்தா பாலம் (நீலகிரி), இலுப்பூர் (புதுக்கோட்டை), கொடைக்கானல் (திண்டுக்கல்), காரைக்குடி (சிவகங்கை), கோத்தகிரி (நீலகிரி), ஆலங்குடி (புதுக்கோட்டை), அமராவதி அணை (திருப்பூர்), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்) தலா 1. என்ற அளவில் மழை பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுவிக்கவில்லை.

English summary
In Tamil Nadu, the Chennai Meteorological Department has informed that there is a possibility of moderate rain in Tamil Nadu and Puducherry from today to December 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X