“எந்த திட்டம் கொண்டு வந்தாலும்.. விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்” - அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: பரந்தூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகள் தொடர்ந்து போராடினார்கள். அவர்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து புதிய விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இப்படி இருக்கையில், எந்த திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
சட்டமன்றத்தில் இன்று விமான நிலையம் பற்றி விவாதங்கள் எழுந்தன. அதிமுக எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி, "ஓசூரில் விமான நிலையம் கொண்டுவரும் திட்டம் இருப்பதாக அரசு கூறுகிறது. விவசாய நிலங்களை எடுத்துவிட்டு.. அங்கு விமான நிலையம் கட்டக்கூடாது. பரந்தூர் போல.. ஓசூர் விவசாயிகளின் குரலையும் அரசு கேட்க வேண்டும். விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துக்கொள்ள வேண்டும். ஓசூரில் விமான நிலையம் கொண்டு வரும் திட்டத்தை கைவிட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும், விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும். வேறு வழி கிடையாது. அதே

அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சு விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பரந்தூரில் மட்டும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் ஓசூரில் ஏன் ரத்து செய்யப்படவில்லை? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
முன்னதாக பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து குறித்து முதலமைச்சர் பேசியதாவது, "சென்னை பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமைய இருக்கும் விமான நிலையத்தை எதிர்த்து போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன். நீண்ட நாட்களாக இந்த திட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். விவசாயிகளே நான்டின் முதுகெலும்பு. விவசாய நிலங்களை பாதுகாக்க மக்கள் போராடி வருகிறார்கள்.
விக்ரவாண்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். தொழில் வளர்ச்சிக்கு விமான நிலையத்தின் பங்கு பற்றி நான் நன்கு அறிவேன். வளர்ச்சிக்கு முழு ஆதரவு உண்டு. ஆனால், பரந்தூரில் இந்த திட்டம் அமைய கூடாது. அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். குறைந்த விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும் மக்கள் அதிகம் பாதிக்கபடாத இடத்திலும் விமான நிலையம் அமைக்க மாற்று இடம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று நான் தெரிவித்திருந்தேன்.
மக்கள் மத்தியில் நான் அன்றே அறிவித்ததை நிறைவேற்றும் பொருட்டு.. புதிய விமான நிலையம் அமைத்தது குறித்து உயர் அதிகாரிகள், துறை வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அதன்படி பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் கைவிடப்படும். புதிய விமான நிலைய திட்டத்திற்கான நிலம் விரைவில் தேர்வு செய்யப்படும்" என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
