கப்பலில் என்ன இருந்தது? சென்னை துறைமுகத்திற்கு சீன மருத்துவ கழிவுகள் வந்ததா? அதிகாரிகள் விளக்கம்

சென்னை துறைமுகத்திற்கு சீனாவிலிருந்து மருத்துவ கழிவுகள் வந்ததாக வெளியாகும் செய்திகளுக்கு சென்னை துறைமுக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை துறைமுகத்திற்கு சீனாவிலிருந்து மருத்துவ கழிவுகள் வந்ததாக வெளியாகும் செய்திகளுக்கு சென்னை துறைமுக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக சீனா மொத்தமாக நடுங்கிப் போய் உள்ளது.இந்த கோரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 171பேர் பலியாகி உள்ளனர். 5900 பேர் கோரோனா வைரஸ் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது. கொரோனா வைரஸ் காரணமாக மொத்தமாக சீனாவில் வுஹன் நகரம் மூடப்பட்டுள்ளது.

எப்படி

எப்படி

சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த கொரோனா வைரஸ் ஏற்கனவே உலகம் முழுக்க பல நாடுகளுக்கு பரவி விட்டது. அமெரிக்காவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் பிரான்ஸ், பிரிட்டிஷ், மலேசியா ஆகிய நாடுகளிலும் தலா ஒருவருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் சீனாவிற்கான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கேரளா

கேரளா

இந்த நிலையில்தான் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. கேரளாவை சேர்ந்த இளைஞருக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது. இவர் கொரோனா வைரஸ் உருவான வுஹன் நகரத்தில் உள்ள வுஹன் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அங்கிருந்து கடந்த வாரம் கேரளா திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் விமான நிலையங்களில் தீவிரமாக மருத்துவ சோதனைகள் நடந்து வருகிறது.

சென்னை துறைமுகம்

சென்னை துறைமுகம்

இதற்கு மத்தியில் சீனாவில் இருந்த மருத்துவ கழிவுகள் அடங்கிய பெரிய கப்பல் சென்னை வந்ததாக நேற்று செய்திகள் வெளியானது. சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் இந்த கழிவுகள் இருப்பதாக செய்திகள் வெளியானது. இதில் கொடூரமான கழிவுகள் இருக்கிறது. இதை எப்படி சென்னைக்கு அனுமதித்தார்கள். ஏன் இது போன்ற விஷயங்களில் அலட்சியம். கொரோனோ வைரஸ் பரவும் நேரத்தில் இதை எப்படி செய்யலாம் என்றும் பலர் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.

என்ன விளக்கம்

என்ன விளக்கம்

இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை துறைமுகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் சீனாவில் இருந்து மருத்துவ கழிவு கொண்ட கப்பல் எதுவும் வரவில்லை. அந்த கப்பலில் எலக்ட்ரானிக் சாதனங்கள்தான் இருந்தது.
மருந்து சாதனங்களும் வரவில்லை. முழுக்க முழுக்க பொய்யான செய்தி இது. சீனாவில் இருந்து வரும் கப்பல்களை முறையாக சோதிக்கிறோம். இதுவரை சென்னைக்கு கடல் வழியாக நோய் கிருமிகள் எதுவும் வரவில்லை. இதை யாரும் நம்ப வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+