இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்!
சென்னை: தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி இன்று அறிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் வெள்ளிக்கிழமை அன்று நோன்புப் பெருநாள் தொடங்குகிறது.
இஸ்லாமியர்களின் முக்கிய மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்திற்கான பிறை கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தென்பட்டது. இதனைத்தொடர்ந்து இஸ்லாமியர்கள் ரலமான் நோன்பை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஷவ்வால் மாதத்திற்கான பிறை வியாழக்கிழமை தென்படவில்லை. இதனால் மார்ச் 21 ஆம் தேதி சனிக்கிழமை தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் அருளப்பட்டது என்பதால், இஸ்லாமியர்கள் இந்த மாதத்தை புனித மாதமாக கருதி, மாதம் முழுக்க நோன்பினை கடைபிடிப்பார்கள். இஸ்லாமிய வழக்கத்தில் சந்திரனின் பிறை பார்க்கப்பட்டு மாதம் கணக்கிடப்படுகிறது. அதன்படி மாத்ததின் முடிவில் பிறை தென்பட்டால் ஒரு மாதத்தின் நாட்களை 29 உடன் நிறுத்திக் கொள்வார்கள். பிறை தென்படவில்லை என்றால் 1 நாளை சேர்த்து 30-ஆக பூர்த்தி செய்வார்கள்.
இஸ்லாமியர்கள் நோன்பு வைப்பது எப்படி?
அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்பு சஹர் எனப்படும் அந்த நேரத்திற்கான உணவுகளை உட்கொண்டு நோன்பினை தொடங்குவார்கள். இடையில் தண்ணீர், தேநீர், உணவு என எதையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
மாலை சூரியன் மறைந்ததும் இஃப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நேரத்தில் பேரித்தம் பழத்தை முதல் உணவாக எடுத்துக் கொண்டு நோன்பினை முடித்துக் கொள்வார்கள். இந்த முறையை முஸ்லிம்கள் சுமார் ஒரு மாத காலம் கடைபிடிப்பர். அதாவது இந்த ரமலான் மாதம் முழுவதும் கடைபிடிப்பர்.
முடிவில் மீண்டும் அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தின் பிறையை வானில் தேடத் தொடங்குவார்கள். பிறை தென்படவில்லை எனில் ரமலான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நோன்பை கடைபிடிப்பார்கள். ஒருவேளை பிறை தென்பட்டால் அடுத்த நாள் ரம்ஜான் பெருநாளை கொண்டாடுவார்கள்.
மார்ச் 21 ஆம் தேதி ரமலான் பண்டிகை
மார்ச் 21-ஐ ரம்ஜான் பண்டிகையின் முதல் நாளாக இந்தோனேசியா உறுதிப்படுத்தியுள்ளது. பிறை காணப்பட்டது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், மார்ச் 21 அன்று ரமலான் கொண்டாடப்படும் என்று இந்தோனேசியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
மார்ச் 19 அன்று பிறை இரவு எதிர்பார்க்கப்பட்டாலும், டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத்தில் வசிப்பவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை மேற்கு வானத்தைப் பார்க்கலாம். வியாழக்கிழமை இரவு பிறை பார்ப்பதற்காக, பார்வையாளர்கள் தொலைநோக்கிகள் மற்றும் பிற கருவிகளுடன் மேல்மட்ட ஈத்காக்களில் கூடினர்.
இந்தியாவில் பிறை நிலவை எப்போது காண முடியும்?
டெல்லியில், இந்திய நேரப்படி காலை 6:24 மணிக்கு சந்திரன் உதித்து, மாலை 6:58 மணிக்கு மறையும். சூரியன் சுமார் மாலை 6:20 மணிக்கு மறையும். சண்டிகரில், இந்திய நேரப்படி காலை 6:25 மணிக்கு சந்திரன் உதித்து, மாலை 7:01 மணிக்கு மறையும். சூரியன் சுமார் மாலை 6:20 மணிக்கு மறையும். மும்பையில், இந்திய நேரப்படி காலை 6:41 மற்றும் 6:42 மணிக்கு இடையில் சந்திரன் உதித்து, மாலை 7:12 மணிக்கு மறையும். சூரியன் சுமார் மாலை 6:40 மணிக்கு மறையும்.
அதே சமயம், லக்னோவில் இந்திய நேரப்படி காலை 6:00 மணியளவில் சந்திரன் உதித்து, மாலை 6:05 மணிக்கு மறையும். ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூருவில், இந்திய நேரப்படி காலை 6:30 மணியளவில் சந்திரன் உதித்து, சென்னையில் சுமார் மாலை 6:20 மணிக்கும், பெங்களூரில் மாலை 6:25 மணிக்கும் சூரியன் மறையும். கொல்கத்தாவில் இந்திய நேரப்படி காலை 6:00 மணியளவில் சந்திரன் உதித்து, மாலை 5:55 மணிக்கு சந்திரன் மறைகிறது.
மார்ச் 19 அன்று, ஷவ்வால் பிறை தென்பட்டால், மார்ச் 20, வெள்ளிக்கிழமை அன்று ஈத் உல்-ஃபித்ர் கொண்டாடப்படும். மார்ச் 19 அன்று, ஷவ்வால் பிறை தென்படவில்லை என்றால், நாளை, மார்ச் 20, வெள்ளிக்கிழமை அன்று ஈத் உல்-ஃபித்ர் கொண்டாடப்படாது. நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் ரமலான் மாதத்தின் 30-வது நாளான வெள்ளிக்கிழமை அன்று நோன்பு நோற்று, மார்ச் 21, சனிக்கிழமை அன்று ஈத் பண்டிகை கொண்டாடப்படும்.
சனிக்கிழமை ரமலான் பண்டிகை
இன்று பிறை தென்படாததால், இந்தியா 2026-ஆம் ஆண்டு ஈத்-உல்-பித்ர் பண்டிகையை மார்ச் 21, சனிக்கிழமை அன்று கொண்டாடும் என தக்காண முஸ்லிம் உலமா மத்திய சபையின் தலைவர் ரோஹித் ஹிலால் கமிட்டி அறிவித்துள்ளார். புனித ரமலான் மாதம் நாளை, மார்ச் 20 அன்று முடிவடைகிறது.
டெல்லியில் பிறை தென்படவில்லை என்பதால் ஈத் உல் ஃபித்ர் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று கொண்டாடப்படும் என டெல்லி ஜாமா மஸ்ஜித்தின் துணை ஷாஹி இமாம் சையத் ஷபான் புகாரி அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வரும் சனிக்கிழமை (மார்ச் 21) அன்று ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்புப் பெருநாள்கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி முஃப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளார்.
-
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்!












Click it and Unblock the Notifications