“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி
சென்னை: "என் மகனுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை; அவர் பரப்புரை செய்து நான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியமில்லை" என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கை சட்டசபை தொகுதியில் போட்டியிடும் கருணாஸிடம் உங்கள் மகன் கென் உங்களுக்காக பரப்புரை செய்வாரா என்ற கேள்விக்கு கருணாஸ் பதில் அளித்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 22 நாட்கள் மட்டுமே உள்ளன. ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவருமான கருணாஸ் இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளார். அவருக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், "2016 ஆம் ஆண்டு தேர்தலில் நான் இரட்டை இலை சின்னத்தில் நின்றதற்கு காரணம், அது எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட சின்னம் என்பதால் தான். அந்த இரட்டை இலைக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் ஜெயலலிதாவுக்கானது. எடப்பாடி பழனிசாமிக்கு யாரும் வாக்களிக்கவில்லை. அவர் கும்பிட்டு வாங்கிய பதவி தான். ஓட்டுப் போட்டு எல்லாம் இபிஎஸ் ஜெயிக்கவில்லை. ஆரம்ப காலத்தில் இருந்து பெருவாரியான வாக்குகள் கொண்ட என்னுடைய சமூகத்தை எடப்பாடி பழனிசாமி புறம்தள்ளி விட்டார்.
அதே சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் போன்றவர்களை அவர் ஓரம் கட்டி அரசியலில் அடையாளம் அற்றவர்களாக மாற்றுவதற்கான முயற்சியை தொடர்ந்து அவர் செய்கிறார். மக்கள் விரோதப் போக்கை கையாளுகிறார் என்பதால் தான் அவரை விட்டு அப்போதே நான் வந்து விட்டேன். ஒரு காலத்திலும் நான் எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் மனநிலையில் இல்லை. அப்போது அது இரட்டை இலை. இப்போது இது ஒத்த இலை. அதுவும் செத்த இலை. அதுவும் பாஜகவிடம் போய்விட்டது. அதை யாரும் மதிக்க மாட்டார்கள்" எனத் தெரிவித்தார்.
ரவுடி வேட்பாளர்களை இறக்கியிருப்பதாக அதிமுக வேட்பாளர் வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கருணாஸ், "அரசியல் சூழ்ச்சி காரணமாக எடப்பாடி பழனிசாமி என் மீது பொய் வழக்குகளைப் போட்டு ரவுடியாக சித்தரித்து விட்டார். ஆனால் ஒரிஜினல் ரவுடி இபிஎஸ் தான்" எனத் தெரிவித்தார்.
உங்கள் மகன் கென் கருணாஸ் உங்களுக்காக பிரச்சாரம் செய்வாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாஸ், "அவருக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. கென் பிரச்சாரம் செய்து நான் ஜெயிக்க வேண்டிய அவசியம் கிடையாது. நான் ஏற்றுக்கொண்ட திமுக கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்த கடந்த ஐந்தாண்டுகள் செய்த திட்டங்கள் சொல்லி வாக்கு கேட்பேன். இந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இல்லத்தரசி திட்டம் போதும் நான் சிவகங்கையில் வெற்றி பெறுவதற்கு" எனத் தெரிவித்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications