அதிமுக அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. ஓபிஎஸ்ஸுக்கு பெரிய அடி.. எம்எல்ஏ பதவிக்கு சிக்கலா?

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் வகித்து வந்த பதவிகள் அனைத்தும் நீக்கப்படுகின்றது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்ப்பு மூலம் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு உள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில் இருந்து அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதலுக்கு தற்போது தீர்வு கிடைத்து உள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கினர். அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதோடு ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

அதிமுக உறுப்பினர்

அதிமுக உறுப்பினர்

இந்த தீர்ப்பு மூலம் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு உள்ளார். அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் வகித்து வந்த பதவிகள் அனைத்தும் நீக்கப்படுகின்றது. எடப்பாடி மூலம் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார். அதுவும் இப்போதைக்கு செல்லும். எடப்பாடி மூலம் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார். அதுவும் இப்போதைக்கு செல்லும்.

உறுப்பினர் இல்லை

உறுப்பினர் இல்லை

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது இப்போதைக்கு செல்லும் என்பதால் அவர் கட்சியில் அதன்பின் எடுத்த முடிவுகள் எல்லாம் செல்லும். அதாவது அவர் கட்சியில் இருந்து நீக்கியது, எடுத்த நடவடிக்கை எல்லாம் செல்லும். இதை எதிர்ப்பு ஓபிஎஸ் சிவில் வழக்கு போடலாம். இதனால் இப்போது அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் இல்லை. அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட ஓ பன்னீர்செல்வம் இப்போது கிடையாது. இதனால் ஓ பன்னீர்செல்வம் தற்போது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை இழக்கும் நிலை ஏற்படும். ஆர்பி உதயகுமார் எதிர்க்கட்சி துணை தலைவராக நேரிடும்.

எதிர்க்கட்சி துணை தலைவர்

எதிர்க்கட்சி துணை தலைவர்

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் அப்பாவு இன்னும் முடிவு எடுக்கவில்லை. சமீபத்தில் புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்யும் ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்து விளக்கம் கேட்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. ஜனவரி 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பி உள்ளனர்.

 தலைமை தேர்தல் அதிகாரி

தலைமை தேர்தல் அதிகாரி

இதற்கு தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பதில் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் இந்த தகவல்தான் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை ஓபிஎஸ் இன்னும் ஒருங்கிணைப்பாளர்தான். அப்படி இருக்கும் போதுதான் பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

என்ன முடிவு எடுப்பார்

என்ன முடிவு எடுப்பார்

இந்த நிலையில் தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றி, சபாநாயகர் அப்பாவு எந்த முடிவும் எடுக்காமல் இருப்பாரா? அல்லது அதிமுக எம்எல்ஏக்கள் பெரும்பான்மை பேர் ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவர் என்று அறிவிக்க கூறுவதால், எம்எல்ஏக்கள் வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் அப்பாவு முடிவு ஆர்பி உதயகுமாருக்கு ஆதரவாக முடிவு எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போது பொதுக்குழு வழக்கில் எடப்பாடிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால் சபாநாயகர் முடிவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது போக கட்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுவிட்டதால், ஓபிஎஸ் எம்எல்ஏ பதவி நீக்கம் செய்யப்படுவதாக சில செய்திகள் வர தொடங்கி உள்ளன. ஆனால் அப்படி எம்எல்ஏ பதவியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்க முடியாது. கட்சிக்குள் இருக்கும்போதே அடுத்த கட்சியில் இணைந்தாலோ/ கட்சியை விட்டு விலகினாலோ எம்எல்ஏ பதவி கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பறிக்கப்படும். ஆனால் இங்கே ஓ பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு உள்ளார். அவர் வேறு கட்சிக்கு தாவவில்லை. எனவே MLA பதவி பறி போகாது. அவர் இரட்டை இலை இல்லாமல் சுயேச்சை போல் செயல்பட முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+