பேரறிவாளன் விடுதலை தீர்ப்பில் காங்கிரசுக்கு மாற்றுக் கருத்து இல்லை.. திருநாவுக்கரசர் எம்.பி. அதிரடி கருத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்படி உரிமைபெறும் உரிமை அனைவருக்கும் உள்ளது என்றும், பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் காங்கிரசுக்கு மாற்றுக் கருத்து கிடையாது எனவும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

 ஆளுநர் நடவடிக்கை

ஆளுநர் நடவடிக்கை

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம் கேள்வி

உச்சநீதிமன்றம் கேள்வி

அப்போது "தன்னை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகும் கூட ஆளுநர் எந்த விதமான முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்." என பேரறிவாளன் தரப்பு தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதிகள், "விடுதலை தொடர்பாக குழப்பம் நீடித்து வருகின்றன். ஏன் பேரறிவாளவனை நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது. பேரறிவாளனை விடுவிப்பதுதான் ஒரே தீர்வு" என்று தெரிவித்தனர்.

பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன் விடுதலை

நீண்ட நாட்களாக பல கட்ட விசாரணைக்கு பிறகு பேரறிவாளன் மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    #PerarivalanRelease | Coimbatore-ல் பட்டாசு வெடித்து கொண்டாட்டம் | Oneindia Tamil
    திருநாவுக்கரசர் கருத்து

    திருநாவுக்கரசர் கருத்து

    இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதாவது "சட்டப்படி உரிமைபெறும் உரிமை அனைவருக்கும் உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பில் காங்கிரசுக்கு மாற்றுக் கருத்து கிடையாது." எனக் கூறி இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+