Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கஷ்டப்படாம யாரும் முன்னேற முடியாது..சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் சூரியின் மாஸ் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாழ்க்கையில் யாருமே கஷ்டப்படாமல் முன்னுக்கு வர முடியாது என்று விடுதலை படத்தின் ஹீரோ சூரி கூறியுள்ளார். விசில் சத்தமும், கைத்தட்டலும் சாதாரணமாக கிடைத்து விடாது என்றும் மாணவர்கள் மத்தியில் மாஸ் ஆக பேசினார் நடிகர் சூரி. குன்றத்தூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சூரி மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார்.

சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் தக்‌ஷாசீலா தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கருத்தரங்கு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி,மிர்ச்சி சிவா,அம்மு அபிராமி, பாபா பிளாக்‌ஷிப் படக்குழுவினர் நடிகர் கவின் உள்ளிட்ட பல வல்லுநர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி சேர்மன் பி.ஸ்ரீராம், செகரட்டரி S.ஸ்ரீதேவி முதல்வர் A.ரமேஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை கல்லூரியை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணர்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரி விழாவில் நடிகர் சூரி

கல்லூரி விழாவில் நடிகர் சூரி

குன்றத்தூர் அருகே உள்ள சென்னை இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தக்‌ஷாசீலா தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் பண்பாடு சார்ந்த கருத்தரங்கு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சூரி,மிர்ச்சி சிவா,அம்மு அபிராமி, பாபா பிளாக்‌ஷிப் படக்குழுவினர் நடிகர் கவின் உள்ளிட்ட பல வல்லுநர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி சேர்மன் பி.ஸ்ரீராம், secretary S.ஸ்ரீதேவி முதல்வர் A.ரமேஷ் மற்றம் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை கல்லூரியை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் சூரி பேச்சு

நடிகர் சூரி பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த போது எப்படி இருந்தேனோ அதே பதற்றத்துடன் இருப்பதாக கூறினார் சூரி. பல நடிகர்களுடன் நடித்துள்ளேன். அப்போது ஜாலியாக இருப்பேன். நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கு பாய்வது போல இருக்கும். விடுதலை படத்தில் நான் ஹீரோ என்பதால் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டுமே என்ற எண்ணம் உள்ளது.

 இளையராஜா

இளையராஜா

இளையராஜா தனது புது ஸ்டியோவில் முதன் முதலில் சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் பாடலுக்கு இசையமைத்ததாகவும்,அது மட்டுமல்லாமல் தனது 45 ஆண்டு அனுபவத்தில் ஹீரோவை அருகில் வைத்து கொண்டு ட்யூன் போடுவது இது தான் முதல்முறை என இளையராஜா கூறியதாக சூரி தெரிவித்தார். தூரத்தில் இருந்து எங்கோ மூலையில் இருந்து இளையராஜாவை பார்த்த எனக்கு அவரது அருகிலேயே அமர்ந்து இசையமைப்பதை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

விடுதலையில் ஹீரோ

விடுதலையில் ஹீரோ

சீமராஜா படத்தில் நான் சின்ன சீனுக்காக சிக்ஸ் பேக் வைத்தேன், அது எனக்கு விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்க உதவி செய்தது என்று கூறினார். காவல்துறையினர் மிகவும் கஷ்டப்படுகின்றனர். யூனிபார்ம் போட்ட பிறகு உள்ள அரசியல் மிகப்பெரியது. நம்மளை போலத்தான் அவர்கள் பலருக்கும் உதவி செய்ய நினைப்பார்கள். ஆனால் அது எல்லோராலும் முடியாது. விடுதலை பார்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொன்னார். என்னை விட அதிகம் சந்தோஷப்பட்டது விஜய் சேதுபதிதான் என்றும் நடிகர் சூரி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+