6 மாதம் பணப்பரிவர்த்தனை செய்யாதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படாது.. கரூவூலத் துறை விளக்கம்
சென்னை: 6 மாதம் பணப்பரிவர்த்தனை நடக்காத ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்ற தகவல் பொய்யானது என கருவூலத் துறை ஆணையர் சமயமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து 6 மாதங்களாக வங்கிக் கணக்கில் இருந்து ஓய்வூதியத் தொகையை எடுக்காதவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால் ஓய்வூதியதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து கருவூலத் துறை ஆணையர் சமயமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில் 6 மாதம் பணப்பரிவர்த்தனை செய்யாதவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படாது. அந்த தகவல்கள் பொய்யானது. பணத்தை எடுக்காத ஓய்வூதியர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் மட்டும் அனுப்பப்படும்.
6 மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதிய வங்கிக் கணக்குகளை முடக்க தமிழக அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. பொதுவாக ஓய்வூதியதாரர்கள் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான உயிர் தகுதி சான்றிதழ் பெறப்படும். தற்போது கொரோனா காலம் என்பதால் அதை சமர்ப்பிப்பதில் இந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதனால் மாதந்தோறும் ஓய்வூதியம் எடுப்போருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. தொடர்ந்து 6 மாதமாக எடுக்காதவர்களின் விவரங்களை சேகரித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அளிக்கவுள்ளோம்.
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் இறப்புக்கு பிறகும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்துவதை தவிர்க்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. எனவே ஓய்வூதியதாரர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என சமயமூர்த்தி விளக்கமளித்தார்.
Recommended Video
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications