மீட்டிங் முடிந்த.. 1 வாரத்தில் விஜய் இப்படி ஒரு முடிவை எடுத்துட்டாரே.. ஷாக்கான ஃபேன்ஸ்.. போச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டிற்கு பிறகு நடிகர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கட்சி ரீதியாக பேட்டிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் விஜய் நடைபயணம் மேற்கொள்ள போகிறார் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் இப்போது அவரின் அரசியல் அதிரடியை எதிர்பார்த்து காத்து இருந்த ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

tvk maanadu tamilaga vetri kazhagam actor vijay

நடிகர் விஜய்.. அரசியல் பணிகளில் பெரிதாக கவனம் செலுத்தாமல் தந்து கடைசி படத்திற்கான பணிகளில் ஈடுபட தொடங்க உள்ளாராம். அதன்படி 69வது படத்திற்கான பணிகளை நடிகர் விஜய் தொடங்கிவிட்டாராம்.

பெரிதாக இப்போதைக்கு அவர் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் எதையும் எடுக்க போவதில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ளது. இப்போதே அரசியல் செய்தால் தான் விஜயால் கொஞ்சம் அரசியல் மாற்றத்தை தர முடியும். ஆனால் அவர் சினிமாவில் தொடர்ந்து பிசியாவதால் அதற்கு வாய்ப்பு குறைவு.

சமீபத்தில் மாநாடு குறித்து வெளியிட்ட அறிக்கையில், மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம், வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது? மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான்.

அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று, நம் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி. குறிப்பாக, மாநாட்டுப் பணிகளுக்காக இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதி சிரத்தையுடன் பணியாற்றிய நம் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்கள், திடல் வடிவமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு. பொதுச்செயலாளருடன் பணிகளைப் பகிர்ந்துகொண்ட பொருளாளர் திரு. பி. வெங்கட்டராமன் அவர்கள், கழகத்தின் மீதான உறுதியான பற்றை இதயத்தில் தாங்கி மாநாட்டிற்காகக் கடுமையாக உழைத்த திரு. ஆர்.பரணிபாலாஜி, (கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர், திரு. என்.மோகன்ராஜ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), திரு. ஜி.பி.சுரேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), திரு.ஏ.வடிவேல் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), திரு. ஈ.ரமேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), திரு. கே.அரவிந்தன் (விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்) மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, பகுதிக் கழக நிர்வாகிகள், மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள். ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்துக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தலைமை நிலையச் செயலகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, திடல் வடிவமைப்புப் பணிகளால், வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்கான இடமாகத் திடலை மாற்றிக் காட்டிய பந்தல் வடிவமைப்பாளர் திரு. ஜே.பி.விஸ்வநாதன் அவர்களுக்கும் நன்றி. மாநாட்டில். நாம் அனைவரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி.

எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை. விக்கிரவாண்டி விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி. மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும். முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி, என்று விஜய் கூறினார்.

இந்த மாநாட்டை தொடர்ந்து கட்சி ரீதியாக பேட்டிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் விஜய் நடைபயணம் மேற்கொள்ள போகிறார் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் இப்போது அவரின் அரசியல் அதிரடியை எதிர்பார்த்து காத்து இருந்த ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+