கைதட்டுங்க.. இனி சென்னையின் “இந்த” ஏரியாக்களில் நோ பவர் கட்! களத்தில் தங்கம் - உங்க பகுதி இருக்கா?
சென்னை: மின் பழுதுகள் காரணமாக அடிக்கடி மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் நிலையில், தடையற்ற மின்சாரம் வழங்கும் மின் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை திருவான்மியூர் மற்றும் தரமணியில் புதிதாக அமையவுள்ள வலிம காப்பு துணை மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஆய்வு செய்தார்.

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் ரூ.92.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முழுவதுமாகவே டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் 230/33 கிலோ வோல்ட் டிஜிட்டல் வளிமகாப்பு துணைமின் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அண்மையில் மின்சாரத்துறை இலாக்காவை பெற்று இருக்கும் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் (மின் தொடரமைப்பு கழகம்) இரா.மணிவண்ணன். இயக்குநர் (திட்டம்)எம்.இராமச்சந்திரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
அதன் பின்னர் தரமணியில் 708 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400/230/110/33 கிவோ வளிமகாப்பு துணைமின் நிலையமாக தரம் உயர்த்தி மேம்படுத்த நடந்து வரும் கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். பின்னர், தற்போது இயங்கி வரும் 230/110/33 கிவோ துணைமின் நிலையத்தினை பார்வையிட்டு அவற்றின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
திருவான்மியூரில் அமைய இருக்கும் 230/33 கிலோ துணைமின் நிலையம் மற்றும் தரமணியில் தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும் 400/230/110/33 கிலோ துணைமின் நிலையம் மூலம் திருவான்மியூர், தரமணி, பெசன்ட் நகர், காந்திநகர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம். வேளச்சேரி மற்றும் பெருங்குடி பகுதிகளிலுள்ள சுமார் நான்கு லட்சம் மின்நுகர்வோர்களுக்கு தடையற்ற, தரமான மின்சாரம் வழங்க இயலும்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தொழில்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் அதிவேக வளர்ச்சி பெற்று வருவதால் பெருகி வரும் மின்தேவையைக் கருத்தில் கொண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு, மேற்படி பணிகளை விரைந்து முடித்து புதிய துணைமின் நிலையங்களை இயக்கத்திற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications