ஒரு கிலோ ரூ162.. தொடர்ந்து எகிறும் தக்காளி விலை.. எப்போது தான் குறையும்? இல்லத்தரசிகள் எதிர்பார்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நேற்று ஒரு கிலோ ரூ.162 க்கு விற்பனையானது.
காய்கறி கடைக்கு சென்றால் தக்களி வாங்காமல் திரும்புவுர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவில் கிச்சன்களில் தக்காளியின் ஆதிக்கம் செலுத்தும். வழக்கமாக பருவ மழை உள்ளிட்ட காரணிகளால் ஜூலை - ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை சற்று அதிகரிப்பது வாடிக்கைதான் என்றாலும் நடப்பு ஆண்டில் கிடு கிடுவென விலை உயர்ந்து இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால் தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து தற்போது 150 ரூபாயை கடந்துள்ளது. குறிப்பிட்டு சொல்வது என்றால் ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்த தக்காளி ஒரு மாதத்திற்குள் கிட்டத்தட்ட 8 மடங்கு அதிகரித்துவிட்டது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது.
இந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் விவசாயிகள் தக்காளி சாகுபடியை செய்யாமல் இருந்து விட்டதாகவும், அதனால்தான் இந்த நிலைமை என்று கூறிய விவசாயிகள், கிருஷ்ணகிரி, ஒசூர் போன்ற இடங்களில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், இன்னும் 2 வாரத்தில் தக்காளி விலை ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்றார்கள். அதேபோல் தக்காளி விலையேற்றம் தற்காலிகமானது எனவும் விரைவில் விலை குறையும் என அதிகாரிகளும் தெரிவித்து இருந்தனர்.
இதனால் தக்காளி விலை குறையும் என இல்லத்தரசிகள் எதிர்பார்த்து இருந்த நிலையில், தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அடைய வைத்துள்ளது. வியாழக்கிழமை அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தின் ஷஹஜான்பூரில் கிலோ 162 ரூபாயாக விற்பனையாது. மெட்ரோ நகரங்களான கொல்கத்தாவில் ரூ.152, டெல்லியில் 120, சென்னையில் ரூ.117, மும்பையில் ரூ.108 என ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications