அண்ணாமலை சொன்னதையே, அமலாக்கத் துறையும் சொல்கிறது- செந்தில் பாலாஜி சரமாரி பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்மையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையின் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று டாஸ்மாக் டெண்டர் மூலமாக ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதன்பின் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கூறி வருகின்றனர். இதனிடையே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் டெண்டர் மூலமாக ரூ.40 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Senthil Balaji TASMAC Enforcement Directorate

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதலமைசர் மு.க.ஸ்டாலினின் முழக்கத்தை பொறுத்து கொள்ள முடியாத மத்திய அரசு, அமலாக்கத்துறையை ஏவி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனையை நடத்தி இருக்கிறார்கள். பல்வேறு முதல் தகவல் அறிக்கை என்று அமலாக்கத்துறை கூறி இருக்கிறது.

ஆனால் எந்த ஆண்டில் பதிவான முதல் தகவல் அறிக்கை என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. அதேபோல் பணியிட மாற்றங்கள் என்பது குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்களுக்காக தான் பணியிட மாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் எந்த தவறும் நடக்கவில்லை. ஆனால் தவறுகளை நடந்திருப்பதை போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

அதேபோல் டெண்டர் என்பது வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் எந்த முறைகேடுகளுக்கு இடமில்லை. அதில் அவர்கள் ஆவணங்களை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்கள். மதுபான உற்பத்தி ஆலைகளுக்கும், பாட்டில் கொள்முதலுக்கும் இடையிலானது டாஸ்மாக் நிறுவனத்திற்கு வெளியில் நடக்கும் சம்பவமானது.

கடந்த 4 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பார் டெண்டராக இருந்தாலும், அது முழுமையாக ஆன்லைன் டெண்டராக மாற்றப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சொல்லி இருக்கிற ஆயிரம் கோடி முறைகேடு என்பது பொத்தாம் பொதுவாக சொல்லி இருக்கிறார்கள். அதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. ரூ.1000 கோடி என்பதை முன்னதாக ஒருவர் பேட்டியில் சொல்லுகிறார்.

பின்னர் அமலாக்கத்துறை அதே ஆயிரம் கோடி என்று அறிக்கையில் பதிவிட்டு கருத்தை முன் வைக்கிறார்கள். இதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது. இது அனைவருக்கும் தெரியும். எனவே, அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். வெளிப்படைத்தன்மையுடன் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதில் உள்நோக்கம் கற்பிக்க தேவையில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது கூட ஒரு நேரத்தில் ஆயிரம் கோடி, மற்றொரு முறை ரூ.40 ஆயிரம் கோடி என்கிறார். கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியில் இருந்த போது என்ன நடந்ததோ, அது மெருகேற்றப்பட்டு புது பொலிவுடன் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. கடைசி 3 மாத காலம் விற்பனை பட்டியலை எடுத்து மட்டுமே, டாஸ்மாக் நிறுவனம் கொள்முதலுக்கான உத்தரவை வழங்கும்.

முழுக்க முழுக்க புதிய நடைமுறையாக இதனை கொண்டு வந்துள்ளோம். அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று 3 நாட்களாகிவிட்டது. ஆனால் பட்ஜெட்டுக்கு முதல்நாளான நேற்று வெளியிடப்பட வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசின் பட்ஜெட்டை மூடி மறைக்க அமலாக்கத்துறை அவசர அவசரமாக அறிக்கையை வெளியிட்டுள்ளார்கள்.

மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி வரையறை பிரச்சனையை மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளார். அதனை பொறுத்து கொள்ள முடியாமல் அமலாக்கத்துறையை ஏவி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் ஒரு அவப்பெயரை உருவாக்க முயற்சிக்கிறார்கள். புதிய ஆலைகளுக்கோ, புதிய கடைகளுக்கோ அனுமதி அளிக்கப்பட்டதா?

அப்படி எதுவும் நடக்கவில்லை. புதிய கொள்கை முடிவுகளையும் எடுக்கவில்லை. இதுவரை டாஸ்மாக் நிறுவனம் எப்படி செயல்பட்டு வந்ததோ அப்படியே செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் அடிப்படையில் சோதனை செய்துள்ளார்கள். ஆனால் எந்த எஃப்ஐஆர் என்பது கூட சொல்லப்படவில்லை என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+