அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லையா? உண்மை என்ன? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
சென்னை: அரசு பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்பது வதந்தி என்றும், சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
ஏப்ரலுக்கு பதில் மே 31 வரை மறு நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கல்வியாண்டின் பாதியில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு இனி கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு கிடையாது. இனி எந்த நாளில் ஓய்வு பெறுகிறார்களோ உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாகச் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஓய்வு பெறும் போது அந்த கல்வியாண்டு இறுதிவரை மறுநியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது என்றுதான் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வுபெற்றால், அந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாள் வரை தொடர்ந்து பணியாற்ற மறுநியமனம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
அதில் திருத்தம் செய்து கல்வியாண்டு முடியும் மே மாதம் வரை மறுநியமனம் செய்வதற்கு அனுமதி வழங்க தமிழ்நாடு அரசிடம் கருத்துரு அளிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த கோரிக்கையை ஏற்க முடியாத நிலை உள்ளதாக தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைப் பின்பற்றி செயல்பட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதேநேரம், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை என்று தவறான செய்திகள் வெளியாகி இருக்கிறது' என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள அறிக்கையில், அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்று மறுநியமனம் வழங்கும்போது கல்வியாண்டு கடைசி வேலை நாள் வரை (ஏப்ரல்) மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணையிடப்பட்டதைத் திருத்தம் செய்து கல்வியாண்டின் இறுதி நாள் (மே 31 ஆம் தேதி) வரை மறுநியமனம் வழங்க அனுமதி அளித்து ஆணை வழங்க அரசிடம் கோரப்பட்டிருந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்க இயலாது. ஆனால், ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பணி நீட்டிப்பு இல்லை என்று தவறான செய்திகள் வெளியாகி இருக்கிறது" என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications