கன்பார்ம்? அதிமுகவை விட பெரிய கட்சியாகும் பாஜக.. எடப்பாடி பதவிக்கும் சிக்கல்? என்ன நடக்குது?
சென்னை: தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
நேற்று தமிழ்நாடு தொடர்பாக பல்வேறு லோக் சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலானவை திமுகவின் வெற்றியை உறுதி செய்துள்ளன.

1 இந்தியா டுடே: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 33- 37 இடங்களில் வெல்லும். பாஜக கூட்டணி 2-4 இடங்களில் வெல்லும். அதிமுக கூட்டணி 0-2 இடங்களில் வெல்லும் என்று ஆக்சிஸ் மை இந்தியா தெரிவித்துள்ளது. பாஜக கூட்டணி 22 சதவிகிதம் வாக்குகளையும் அதிமுக கூட்டணி 21 சதவிகிதம் வாக்குகளையும் திமுக கூட்டணி 46 சதவிகிதம் வாக்குகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
2 தந்தி டிவி கணிப்பு: தமிழகத்தில் 33 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக கூட்டணிக்கு 0 முதல் 5 தொகுதிகள் வரை கிடைக்கலாம் எனவும், அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம் எனவும் தந்தி டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக கூட்டணிக்கு அடுத்தப்படியாக பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்றால் அது நிச்சயம் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
3 டைம்ஸ் நவ்: திமுக 34-35 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2-3 இடங்களில் பாஜக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 2 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்ல வாய்ப்பு என்று டைம்ஸ் நவ் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
4 நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு: அதிமுக கூட்டணி 0 ± 2 இடங்களை வெல்லும். திமுக கூட்டணி 29 ± 5 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி 10 ± 4 இடங்களை வெல்லும் என்று நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா கணிப்பு தெரிவித்துள்ளது.
5. டிபி லைவ் நியூஸ்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 37-39 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதேபோல் அதிமுக 0-1 இடங்களில் வெல்லும் என்று டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பாஜக கூட்டணி டிபி லைவ் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.
அதிமுக - பாஜக: இதன் மூலம் தமிழ்நாட்டில் அதிமுகவை விட பாஜக பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று லோக்சபா தேர்தல் எக்சிட் போல் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த கணிப்புகளில் எல்லாம் அதிமுகவை விட பாஜக அதிக இடங்களை அல்லது அதிக வாக்கு சதவிகிதத்தை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
எடப்பாடி பதவிக்கு சிக்கல்; புரட்சி: ஏற்கனவே அதிமுக கட்சி லோக்சபா 2024 தேர்தலில் பெரிய அளவில் இடங்களை குவிக்காது என்று கட்சி தலைமை தகவல்கள் சென்றுள்ளதாம். இதன் காரணமாகவே தேர்தல் முடிந்ததும் நிர்வாகிகளை அழைத்து எடப்பாடி புலம்பி இருக்கிறார். கண்டிப்பு காட்டி இருக்கிறார். வெற்றிபெற முடியாது என்று தெரிந்து புலம்பி இருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி விரக்தியாக இருந்துள்ளார் . உங்களை எல்லாம் 4 வருடம் சம்பாதிக்க விட்டேன். ஆனால் நீங்கள் தேர்தலில் செலவே செய்யவில்லை. ஏன் இப்படி செய்தீர்கள், என்றெல்லாம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைதிப்படை ஆபரேஷன்: இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அமைதிப்படை ஆபரேஷன் ஒன்று நடந்து வருகிறதாம். அதிமுகவில் லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு பின் மீண்டும் உட்கட்சி மோதல் வெடிப்பதற்கான அறிகுறிகள் ஏற்பட தொடங்கி உள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு பெல்ட் டீம் உருவாகிக்கொண்டு இருக்கிறது.
மணியான சிலர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக இருந்தால் கட்சி வெற்றிபெறாது. எல்லோரும் ஒன்று சேர வேண்டும். வெளியே சென்றவர்கள் உள்ளே வர வேண்டும். இல்லையென்றால் நமக்கும் எதிர்காலம் இருக்காது. கட்சி வென்றால்தான் நாம் சம்பாதிக்க முடியும். தனி தனியாக இருந்தால் அது முடியாது என்று முடிவு செய்துள்ளார்களாம்.
எடப்பாடி: இதை மனதில் வைத்தே சசிகலா - டிடிவி தினகரன் - ஓ பன்னீர்செல்வம் உடன் மணியான குழுவை சேர்ந்த சிலர் பேசி வருகிறார்களாம். கட்சியை மீட்டு ஒருமைப்படுத்த வேண்டும். அப்போதுதான் நம் எதிர்காலம் சரியாகும். இல்லையென்றால் கட்சிக்கு மட்டுமல்ல நமக்கும் எதிர்காலம் இருக்காது என்று "அமைதிப்படை" குரூப் கருதுகிறதாம்.
இதன் காரணமாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் எடப்பாடி புதிய ஆட்களை கொண்டு வருகிறார். விரைவில் அவர்களை பெரிய பொறுப்பில் போடுவார். கட்சியில் தனக்கு எதிராக அமைதிப்படை புரட்சி நடப்பது தெரிந்து எடப்பாடி இப்படி செய்கிறார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு












Click it and Unblock the Notifications