சென்னை மாநகரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.. தமிழக அரசு முக்கிய விளக்கம்
சென்னை: சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழக அரசு வரும் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கப்போவதாக அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறக்கப்படும் என்று நேற்று அறிவித்தது.

அண்டை மாநிலங்களில் மதுவாங்குவதற்காக எல்லைப்புற மாவட்டத்தினர் மொத்தம் மொத்தமாக சென்ற நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தடுப்பதற்காக மதுக்கடைகள் திறக்கப்படுவதாக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்தது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில் மதுக்கடைகளை திறக்க எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் சென்னையில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மாநிலம் முழுவதும் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை காரணம் காட்டி எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழலில் மதுக்கடைகள் திறப்பு விஷயத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சென்னையில் மே 7ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. அதாவது சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுநாள் மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று சென்னையில் அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழக அரசு கொரோனா பாதித்த கட்டுப்பாட்டு பகுதிகளில் மதுக்கடைகள் எதுவும் திறக்கப்படாது என்று நேற்றே விளக்கம் அளித்து இருந்தது. சென்னை மாநகர எல்லைக்குள் வராத, கட்டுப்பாட்டில் வராத பிற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தெரிகிறது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications