Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயகாந்த் கழுத்தில் துளையா? டிரக்கியாஸ்டமி சிகிச்சையா?.. மியாட் மருத்துவமனை விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்படுவதாக வந்த தகவலை மியாட் மருத்துவமனை மறுத்துள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மார்பு, சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

No Tracheostomy for Vijayakanth, refuses Miot hospital

விஜயகாந்த் மருத்துவமனை சேர்க்கப்பட்டதால் தொண்டர்கள் கவலை அடைந்த நிலையில் நவ. 23ஆம் தேதி மியாட் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், சிகிச்சைக்கு அவர் நன்றாக ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மருந்துகள் அனைத்தையும் அவர் உடல்நிலை ஏற்று கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, விஜயகாந்த் சுயநினைவோடு இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக மியாட் மருத்துவமனையில் இருக்கும் விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாகவும் அவருக்கு திடீரென 24 மணி நேரமாக உடல்நிலை சீராக இல்லை என்றும் மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இதுகுறித்து மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் நேற்று கூறியிருப்பதாவது: விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். விரைவில் விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறுவார் என நம்புகிறோம். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென நேற்று மாலை தீவிர இருமல் தொந்தரவால் அவதிப்படும் விஜயகாந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு பைப்பாப் மாஸ்க் எனப்படும் அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் மூலம் கூடுதல் ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் விஜயகாந்துக்கு மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் அவருக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. டிரக்கியாஸ்டமி என்பது கழுத்தில் துளையிட்டு மூச்சுவிட சிரமப்படுவோரின் நுரையீரல் குழாயுடன் செயற்கை சுவாசத்தை இணைப்பதுதான். இந்த தகவலை அறிந்த தேமுதிக தொண்டர்களும் விஜயகாந்த் ரசிகர்களும் வேதனை அடைந்து அச்சமடைந்தனர்.

இந்த நிலையில் விஜயகாந்துக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை என்பது தவறான தகவல் என மியாட் மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. இதை அந்த மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார். விஜயகாந்துக்கு வழக்கமாக நுரையீரல் பிரச்சினைக்கு வழங்கப்படும் சிகிச்சையே வழங்கப்படுகிறது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+