Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரும்ப திரும்ப பொய் சொல்றாரே.. தமிழ்நாட்டை உபி முந்தியதாக கூறிய யோகி.. விட்டு விளாசிய பிடிஆர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் உத்தர பிரதேசம் முந்துவிட்டதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு தற்போது ஜிடிபி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. முதல் இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டை உத்தர பிரதேசம் முந்திவிட்டதாக பொய்யான செய்தி ஒன்றி பரவி வருகிறது. இதை பற்றி தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பதை அவர் உறுதி செய்தார்.

No Uttar Pradesh did not have the 2nd position ahead of Tamil Nadu in GDP PTR response to Yogi

அவர் தனது பேச்சில், நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. சமூகநீதி, ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றம், தமிழ்நாட்டு இளைஞர்களை சர்வதேச சாதனையாளர்களாக மாற்றுவது, அறிவுசார் பொருளாதார வளர்ச்சி, சமநிலையுடன் கூடிய பெண் முன்னேற்றம், நிலையான எதிர்காலம், தமிழ்மொழி மற்றும் பண்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது, என்றுள்ளார்.

உண்மை என்ன?: ஒரு தனியார் ட்விட்டர் பக்கம் வெளியிட்ட பொய்யான செய்தியில் இருந்துதான் இந்த வதந்தி பரவியது. அந்த நிறுவனம்தான் முதலில் உத்தர பிரதேசத்தில் ஜிடிபியில் இரண்டாம் இடம் பிடித்ததாக கூறியது. அதை தொடர்ந்து வடஇந்திய ஊடகங்கள் பல இதே செய்திகளை வெளியிட்டன.

எல்லா நிறுவனங்களும் சோர்ஸ் என்று கூறியது. ஆனால் உண்மையில் அந்த சோர்ஸ் என்ன என்பதை கூறவே இல்லை. பொதுவாக ஜிடிபி டேட்டா ஒன்றிய புள்ளியியல் துறை மூலம் அல்லது ஆர்பிஐ மூலம் வெளியிடப்படும். ஆனால் இதுவரை ஒன்றிய புள்ளியியல் துறை அல்லது ஆர்பிஐ அப்படி ஒரு டேட்டாவை வெளியிட்டு.. தமிழ்நாட்டை உத்தர பிரதேசம் முந்துவிட்டதாக கூறவில்லை.

அண்ணாமலை: பல ஊடகங்கள் இப்படி வடக்கில் கூறிய நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையும் இதே விஷயத்தை குறிப்பிட்டார். விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டை உத்தர பிரதேசம் முந்துவிட்டதாக குறிப்பிட்டார். ஆனால் அவரும் அதற்கான டேட்டாவை வெளியிடவில்லை.

இன்னொரு பிரபல ஊடகம் ஒன்றும் உ.பி; நாட்டின் 2-வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியது என்று கூறியது., உத்தர பிரதேசத்தின் பங்களிப்பு 9.2 சதவீதமாக ஜிடிபி பங்களிப்பில் உயர்ந்துவிட்டதாக கூறியது. தமிழ்நாட்டில் இது 9.1 சதவீதமாக உள்ளது என்றும் .. இதனால் தமிழ்நாடு மூன்றாவது இடம் என்றும் எப்போது போல 15.7 % பங்களிப்புடன் மஹாராஷ்டிரா என்றும் செய்திகளில் பொய்யாக கூறப்பட்டது,

உண்மை என்ன?: இணையத்தில் பரவி வரும் இந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது ஆகும். தமிழ்நாடு தற்போது ஜிடிபி உற்பத்தியில் இரண்டாம் இடம் வகிக்கிறது. முதல் இடத்தில் மஹாராஷ்டிரா உள்ளது. தொடர்ந்து இதே நிலைதான் நீடிக்கிறது.

SOIC என்ற தளம் வெளியிட்ட GDP தரவுகள் அடிப்படையில்தான் இந்த பொய்யான செய்தி பரவுகிறது. அந்த நிறுவனம்தான் உத்தர பிரதேசத்திற்கு 9.2 சதவிகிதம் கொடுத்தது. அந்த நிறுவனம் கொடுத்த எல்லா மாநிலங்களின் கூட்டு தொகை ஜிடிபியை கூட்டினால் 108 சதவிகிதம் வருகிறது. அந்த டேட்டா பொய்யானது, அரைகுறையானது என்பதை உறுதி செய்ய இதுவே பெரிய உதாரணம்.

அதோடு கர்நாடகா டாப் 5 மாநிலங்களில் இல்லை. 6வது இடத்தில் இருந்த உத்தர பிரதேசம்.. இரண்டாம் இடத்திற்கு வந்தது போல டேட்டா மாற்றப்பட்டு உள்ளது. கூட்டு சதவிகிதம் 100 வர வேண்டும் என்ற அடிப்படையை கூட அந்த தளம் கணக்கில் கொள்ளவில்லை.

ஆர்பிஐ தகவல்: உண்மையான ஆர்பிஐ தரவுகளின்படி. கடந்த 2011-2012 ஆம் நிதியாண்டிருந்தே தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா 31.08 லட்சம் கோடிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு 20.7 லட்சம் கோடிகளுடன் எப்போதும் போல "இப்போதும்" இரண்டாம் இடத்தில உள்ளது. அதன்பின் உத்தர பிரதேசம் 19.7 லட்சம் கோடிகளுடன் மூன்றாம் இடத்தில உள்ளது. 4ம் இடத்தில கர்நாடகா உள்ளது. இதுவே ஆர்பிஐ வெளியிட்டுள்ள உண்மையான டேட்டா ஆகும்.,

மீண்டும் பொய்: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டை பொருளாதாரத்தில் உத்தர பிரதேசம் முந்துவிட்டதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் கூறியுள்ளார். நேற்று பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இந்த பொய்யை மீண்டும் கூறினார்.

அவர் இப்படி கூறியதற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், சோகம் என்னவென்றால், பெரும்பாலான வாட்ஸ்அப் பல்கலைக்கழகத்தைப் பின்பற்றுபவர்கள் இதை எல்லாம் உண்மை என்று நம்பி விடுவார்கள். கோயபல்ஸின் "பொய்யை அடிக்கடி சொல்லுங்கள், அது உண்மையாகிவிடும்" என்ற பிரச்சாரக் கோட்பாட்டின் அடிப்படையில் இப்படி பொய்யை பரப்புகிறார்கள். சமூக ஊடக பொய்கள் உண்மையான அறிவை மீறும் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது, என்று பிடிஆர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+