மாமல்லபுரம் போறீங்களா.. கிழக்கு கடற்கரை சாலையில் இன்று வாகனங்கள் செல்ல தடை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் இன்று காலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த தனியார் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்று இன்றைய தினம் சைக்கிளத்தான் பேரணியை நடத்துகிறது. இதனால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

No vehicles allowed in Chennai ECR today

அதன்படி சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர்- மாமல்லபுரம் வரை இன்று நடைபெறும் இந்த சைக்கிளத்தான் போட்டியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த வழியாக செல்ல விரும்புவோர் அக்கரையில் வலது புறம் திரும்பி கலைஞர் கருணாநதி சாலை வழியாக ஓஎம்ஆர் சாலைக்கு சென்று சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம், திருப்போரூர் வழியை பயன்படுத்த காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

எச்சிஎல் நடத்தும் இந்த பேரணியில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கிறார்கள். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி இந்த பேரணியை தொடங்கி வைக்கிறார். இந்த பேரணி செல்லபும் வழித்தடத்தில் பிற வாகனங்களால் ஏற்படும் இடையூறை தவிர்க்க கடந்த 8ஆம் தேதி காலை போக்குவரத்து பழைய மாமல்லபுரம் சாலை வழியே மாற்றப்பட்டுள்ளது.

அந்தந்த பகுதி உள்ளூர் வாகனங்களை கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதிக்காமலும் சைக்கிள் பேரணி ஒத்திகையை போலீஸார் நடத்தினர். பேரணி செல்லும் பகுதியில் வாகனத்தில் செல்வதை தவிர்க்குமாறு தனியார் நிறுவனம் சார்பிலும் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+