என்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை… கருணாஸ் வருத்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளதாக திருவாடாணை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய அதிமுக கூட்டணி, அம்மா ஆத்மா விரோத கூட்டணி என விமர்சனம் செய்தார்.

Nobody has called me to the coalition Says Karunas

தன்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என விரைவில் தெரிவிக்க உள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும், சசிகலாவை சந்திக்க வாய்ப்பு கேட்டிருப்பதாகவும் கருணாஸ் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரண் கொண்ட சந்தர்ப்பவாத கூட்டணி, இது அவரின் ஆத்மாவிற்கு விரோதமான செயல். நான் இரட்டை இலையில் நின்று வெற்றிபெற்றிருக்கிறேன். வேறு கட்சிக்கு வாக்கு கேட்டால் என் பதவி பறிபோகும் வாய்ப்பு உள்ளது.

ராமநாதபுரம் தொகுதி கொடுத்தால் எந்த கூட்டணியில் இருந்தாலும் நான் வெற்றி பெறுவேன். என்னை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது. தனியரசும் அழைக்கப்படவில்லை.

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு, அரபு நாட்டில் உள்ளது போன்று, கடுமையான தண்டனை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வரும் 20 ம் தேதி ஜெனீவா ஐ.நா சபையில் இலங்கை இனப்படுகொலை பற்றி உரையாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+