டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்தான்.. அடித்து சொல்லும் அதிமுக இன்பதுரை
சென்னை: தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்ற புகழை பெற்ற காவிரி டெல்டாவில் சூழலை பாதிக்கும் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை எம்பி சுதா, காவிரி டெல்டா குறித்து கேள்வி எழுப்பினார்.
அதில், "டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு எந்த முன்மொழிவும் எடுக்கவில்லை." என பதிலளித்தது. இதனால் திமுக உள்ளிட்ட கட்சிகள் அதிமுகவை விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து அதிமுக சட்டப்பிரிவு செயலாளர் இன்பதுரை கூறுகையில், "சட்டம் இப்போதும் அமலில் உள்ளது. மக்களவை உறுப்பினர் சுதா நாடாளுமன்றத்தில் மூன்று கேள்விகளை எழுப்பினார். டெல்டா மாவட்டங்களில் உள்ள பெட்ரோலிய கெமிக்கல் நிறுவனங்கள் எவை, அவற்றில் எத்தனை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதா.
ஏற்கனவே தமிழ்நாடு அரசு டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியுள்ளது. அதை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக (Eco Sensitive Zone) அறிவிக்க மத்திய அரசுக்கு திட்டம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். ஏற்கனவே சட்டம் இயற்றப்பட்டதை ஒப்புக்கொண்டுதான் அவர் அந்த கேள்வியை கேட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கின்ற அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது. சட்டம் வேறு, அறிவிப்பு வேறு. பொதுவாக அரசியமைப்பு சட்டம் 162 பிரிவின் படி மாநில அரசு ஆளுநர் ஒப்புதலுடன் சட்டம் இயற்ற முடியும். ராணுவம், கப்பல் படை, நிதி, வெளியுறவு உள்ளிட்ட ஒரு சிலவற்றில் மட்டும் விதிவிலக்கு இருக்கிறது. அவற்றுக்கு மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது.
அதேநேரத்தில் வேளாண்மை, இயற்கை எரிவாயு உள்ளிட்ட 61 விஷயங்களில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியும். அதற்கான தகவலை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதினார். அவரும் அதற்கு பதில் அளித்தார். அதன் பிறகு ஆளுநரும் ஒப்புதல் அளித்தவுடன், சட்டமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டதால் தான் அது அரசிதழில் வெளியானது. இப்போதும் அந்த சட்டம் அமலில் இருக்கிறது. அதை எந்த நீதிமன்றமும் தடை செய்யவில்லை. கழுகிடம் வழி கேட்டால் அது செத்த நாயிடம் தான் அழைத்து செல்லும். அதுபோல சமூகவலைதளங்களில் சிலர் தவறாக வழிகாட்டுகிறார்கள். இது உண்மையான சட்டம். இப்போதும் அமலில் தான் இருக்கிறது.
ஏற்கனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் அமலில் இருப்பதால், கூடுதலாக சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசிடம் கோர வேண்டியதில்லை. மேலும் அவர்கள் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிப்பதற்கு மாநில அரசு கோரவில்லை என்று தான் கூறியுள்ளனர். மாநில அரசின் சட்டம் வரவில்லை என்று யாரும் கூறவில்லை.
எடப்பாடி அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் மீது கடும் வன்மம் கொண்டு, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட மொத்த அறிவாலய கூட்டமும் ஊடகம் மற்றும் சமூகவலைதளங்களில் நாள் முழுக்க விரித்த பொய் மூட்டைகளை கட்டவிழ்க்கிறார்கள். இதைக் கண்ட கோயபல்சே கூட கல்லறையில் புரண்டு படுத்திருப்பார்." என்று கூறியுள்ளார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications