வெறும் பென்சிலால் சுவரில் ஓட்டை போட்ட நபர்! ரூ.1.5 கோடி வீட்டில் பொசுக்னு துளை! வீடு கட்டுவோர் கவனம்
சென்னை: சொந்த வீடு என்பது பெரும்பாலானோருக்கு வாழ்நாள் கனவாகும்.. இதற்காகவே பாடுபட்டு சம்பாதித்த பணத்தை சேர்த்து லட்சக்கணக்கிலோ, அல்லது கோடிக்கணக்கிலோ தங்களது சக்திக்கேற்ப வீடுகளை கட்ட நேரிடுகிறது. அப்படி கட்டப்படும் தங்கள் கனவு இல்லத்தில், குறைகள் ஏற்படும்போது அதை ஜீரணிக்கவே முடிவதில்லை. உத்தர பிரதேசத்தில் நடந்த சம்பவம் ஒன்று, அரசு மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது?
சமீப காலமாகவே வீடுகளின் கட்டுமானங்கள் சரியில்லாமலும், தரம் குறைவாகவும் இருப்பதாக ஒரு பேச்சு உள்ளது.. பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை வீடு கட்ட பயன்படுத்தும்போது அதில் பல குளறுபடிகள் நடப்பதாக கூறப்படுகிறது. சில இடங்களில் பணத்தை வாங்கிக் கொண்டு தரமில்லாத கட்டுமான பொருட்களை வைத்து வீடு கட்டிவிடுகிறார்களாம்.

சொந்த வீடு கனவு
எனவேதான் வீடு கட்டும் யாவரும் பில்டர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இப்போது ஒரு சம்பவம் உத்திர பிரதேசத்தில் நடந்து, பலரை அதிர வைத்துள்ளது.
நொய்டாவை சேர்ந்த அந்த நபரின் பெயர் கபீர்.. இவர் சுமார் ஒன்றரை கோடி மதிப்பில் சொந்தமாக ஒரு வீட்டை கட்டியிருக்கிறார்.. ஆனால் அந்த வீட்டின் தரம் மோசமாக இருப்பதாக தெரிகிறது..
பென்சிலால் ஓட்டை
இதனால் அதிருப்தியும், ஏமாற்றமும், கோபமும் அடைந்த வீட்டு உரிமையாளர் கபீர், தன்னுடைய வீட்டு சுவற்றில் பென்சிலால் ஓட்டை போட்டுள்ளார்.. இதனை வீடியோவாகவும் எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
கபீர் (kabeer.unfiltered) தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ள அந்த வீடியோவில், 'என்னுடைய இந்த பிரீமியம் பிளாட்டிலுள்ள வீட்டின் விலை மிகவும் அதிகம். ஆனால் கட்டுமானத்தின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பென்சிலால் கூட வீட்டு சுவரில் துளைகள் போட முடிகிறது' என்று சொல்லிக் கொண்டே, பென்சிலை வைத்து சுத்தியலால் சுவற்றில் தட்டுகிறார். அப்போது பென்சில் சுவற்றில் ஓட்டையிடுவதை தெளிவாக காண முடிகிறது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதுமே, நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர்.. இப்படியெல்லாம்கூட யாராவது வீடு கட்டுவார்களா? அப்பார்ட்மென்ட் வீடுகளிலேயே இந்த நிலைமை என்றால்?
நெட்டிசன்கள் அதிர்ச்சி
வீடு கட்டும்போது கட்டுமான பணிகளை உரிமையாளரும் உடனிருந்து கவனித்திருக்க வேண்டும் என்று கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர்..
மேலும் சிலர், இந்த சுவர்கள் AAC (Autoclaved Aerated Concrete) பிளாக்குகளால் ஆனவை.. மிகவும் இலகுவானது.. வெயிட் தாங்காதவை.. நிலநடுக்கத்தின்போது பாதுகாப்பை கருதி உயர் கட்டிடங்களில் பயன்படுத்தப்படுகிறது, நம்முடைய நாட்டின் பெரு நகரங்களில் அதிக விலைக்கு குறைந்த தரத்திலான வீடுகள் இப்படித்தான் வழங்கப்படுகின்றன..
எனினும் அதிக விலையை கொட்டி வீட்டை கட்டியிருப்பதால், வீட்டு வசதி வாரியம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கபீருக்கு பதிலளித்து வருகிறார்கள்..
உண்மைத்தன்மை என்ன?
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தாலும் இதன் உண்மைத்தன்மை தெரியவில்லை.. அதேபோல, கபீர் வீட்டின் சுவற்றின் பலவீனத்துக்கும் உண்மையான காரணம் தெரியவில்லை.. எனினும், டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள விலையுயர்ந்த கட்டிடங்களின் கட்டுமான தரம் குறித்த கவலையை இந்த வீடியோ தற்போது எழுப்பி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications