சென்னைக்கு ரயில் ஏறுபவர்களின் பல வருட கஷ்டம்.. தெய்வத்திற்கே கேட்டிருச்சு.. ரயில்வே சூப்பர் முடிவு
சென்னை: சென்னைக்கு ரயில் ஏறும் ஒவ்வொருவரும் இந்த குரல் கொடுத்திருப்பார்கள். ஆனால் இதுவரை இந்த சத்தம் இந்திய ரயில்வேக்கு கேட்டதா என்று தெரியவில்லை.. முதல்முறையாக அவர்களுக்கு கேட்டிருக்கிறது. ஆம் ஏசி இல்லாத ரயில் பெட்டிகள் பக்கமும் அவர்களின் பார்வை மீண்டும் திரும்பி உள்ளது.
வரும் 2026-ம் ஆண்டிற்குள் 10 ஆயிரம் ஏசி அல்லாத பெட்டிகள் தயாரிக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் இந்த முடிவு, சென்னைக்கும், கோவைக்கும், பெங்களூருக்கும் பிழைப்பு தேடி பயணிக்கும் அத்தனை பேருக்கும் நிச்சயம் நல்ல செய்தியாக இருக்க போகிறது.

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று. இது மத்திய அரசு கையில் இருக்கும் வரை தான் சாமானியர்களுக்கான போக்குவரத்ததாக இருக்கும். அதேநேரம் தனியாரிடம் போனால், சாமானியர்களுக்கு எட்டாத உயரத்திற்கு ரயில் பயணம் மாறும் என்ற கவலை பலருக்கும் உள்ளது. ஏனெனில் இப்போதே லாபம் கருதி ஏசி பெட்டிகளை அதிகரிப்பது, வந்தே பாரத் போன்ற ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவது போன்ற விஷயங்களில் இந்திய ரயில்வே அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
அதன் காரணமாக சாமானியர்கள் 3 மாதம் முன்பே சென்னையில் இருந்து சொந்த ஊருக்க போக திட்டமிட்டாலும் எட்டாத உயரத்தில் இருக்கிறது ஸ்லீப்பர் கோச் ரயில் பயணம். சென்னையில் இருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் அல்லது நெல்லை எக்ஸ்பிரஸ் அல்லது தென் மாவட்டத்தின் எந்த ரயிலிலும் ஸ்லீப்பர் கோச்சில் குடும்பத்துடன் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமாக கடந்த 10 வருடங்களில் இல்லை. ஏனெனில் மக்கள் பலர் புலம் பெயர்ந்து சென்னைக்கு வந்துவிட்டார்கள்.
சென்னை வீங்கி கொண்டே போகிறது. இப்போத உள்ள நிலவரப்படியே சுமார் 2 கோடி பேர் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருக்கிறார்கள். இதில் ஒரு கோடி பேர் வெளியூரைச் சேர்ந்தவர்கள். இவர்கள் பயணிக்க விரும்புவது ரயிலில் தான். ஏசி அல்லாத ரயில் பெட்டியில் பயணிப்பதுதான் இவர்களுக்கு இருக்கும் ஒரே சிறப்பான பயணம். ஆனால் ஏசி அல்லாத பெட்டிகள் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு குறைந்துவிட்டது. அதேபோல் புதிதாக ஏசி அல்லாத பெட்டிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.
இதனால் சென்னைக்கு ரயில் ஏறும் ஒவ்வொருவரும் இது சம்பந்தமாக புலம்பியடி தான் சென்று வருகிறார்கள். இவர்களின் குரல் இதுவரை இந்திய ரயில்வேக்கு கேட்டதா என்று தெரியவில்லை.. ஆனால் இப்போது முதல்முறையாக கேட்டுள்ளது. ஏசி இல்லாத ரயில் பெட்டிகள் பக்கமும் அவர்களின் பார்வை மீண்டும் திரும்பி உள்ளது. வரும் 2026-ம் ஆண்டிற்குள் 10 ஆயிரம் ஏ.சி. இல்லாத பெட்டிகள் தயாரிக்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இது சென்னைக்கு மட்டுமல்ல மொத்த இந்தியாவிற்கும் சிறப்பான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அனைத்து தரப்பு மக்களின் பயணத்தையும் எளிதாக்கும் வகையில் அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 10 ஆயிரம் ஏ.சி. இல்லாத பெட்டிகள் உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டிருக்கிறது. அதன்படி, 2024-25 மற்றும் 2025-26-ம் நிதியாண்டுக்குள் 5 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட முன்பதிவில்லா பெட்டிகள் உள்ளிட்ட 10 ஆயிரம் ஏ.சி. இல்லாத பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது,.
இதில் 2024-25-ம் நிதியாண்டில் அம்ரித் பாரத் ரெயில் பெட்டிகள் உள்பட 2 ஆயிரத்து 605 பொதுப்பெட்டிகள், 1,470 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் (ஸ்லீபர்), 323 எஸ்.எல்.ஆர். பெட்டிகள், 32 சரக்கு பெட்டிகள் மற்றும் 55 பேன்ட்ரி பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளது.
2025-26-ம் நிதியாண்டில் அம்ரித் பாரத் ரெயில் பெட்டிகள் உள்பட 2 ஆயிரத்து 710 பொதுப்பெட்டிகள், 1,910 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 514 எஸ்.எல்.ஆர். பெட்டிகள், 200 சரக்கு பெட்டிகள், 110 பேன்ட்ரி பெட்டிகள் தயாரிக்கப்படும் என்று ரயிலவே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications