சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தி தெரியாத மாநிலங்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா? - சீமான்

இந்தி தெரியாத மாநிலங்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டிருக்கிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளியேறுங்கள் என்று சொல்வது போல இந்தி தெரியாத மாநிலங்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    தமிழக மருத்துவர்களை வெளியேற சொன்ன ராஜேஷ் கோட்சே| Short stories| Oneindia Tamil

    மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நாடு முழுவதும் உள்ள இயற்கை மருத்துவர்களுக்கு கடந்த 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றன. கடைசி நாளான 20ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்தவுடன் மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கோட்சே இந்தியில் பேசினார். இதனைப் பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆங்கிலத்தில் பேசும்படி கூறினர்.

    Non Hindi speaking states should leave the union government asks Seeman

    இதனை ஏற்க மருத்த ராஜேஷ், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும், இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என தெரிவித்தார். ராஜேஷ் கோட்சே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மண்ணின் மைந்தர்களுக்கு பணி... தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் -தமிமுன் அன்சாரி போர்க்கொடிமண்ணின் மைந்தர்களுக்கு பணி... தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் -தமிமுன் அன்சாரி போர்க்கொடி

    ஆயுஷ் துறை செயலாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு அதிகாரியாக இப்படிப் பேசுவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக சாடியுள்ள ஸ்டாலின், அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பதுதான் திட்டம் என்ற பாஜக அரசின் எண்ணத்தை வெளிப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

    Non Hindi speaking states should leave the union government asks Seeman

    இதேபோல், ராமதாஸ், வைகோ, விஜயகாந்த், ஜி.கே வாசன். கனிமொழி, ஜோதிமணி என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    யார் பிரிவினைவாதி? இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வெளியேறுங்கள் என்று சொல்வது போல இந்தி தெரியாத மாநிலங்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சொல்வீர்களா? ஏக்கத்தோடும்... எதிர்பார்ப்போடும்... என்று பதிவிட்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

    English summary
    NTP leader Seeman post his twitter page, Would you dare to say that all non-Hindi speaking states should leave the union government just as non-Hindi speakers were told to leave? with Much Longing & Expectation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X