வடசென்னையே "கிளீன்" ஆகுதாமே.. நாலாபக்கமும் பறக்கும் ஆபிசர்ஸ்.. அடியோடு மாறுதா? அடையாளமே மாறுதா? வாவ்
சென்னை: கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து முனையங்கள், மெட்ரோ ரயில் பணிகள், மேம்பாலங்கள், ரயில்வே ஸ்டேஷன்கள் என பல்வேறு பணிகளில் சென்னை மாநகரம் ஈடுபட்டு வரும்நிலையில், வடசென்னை குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
இந்தியாவிலேயே மிக நீளமான உயர்மட்ட சாலைத்திட்டமான துறைமுகம்-மதுரவாயல் பறக்கும்சாலை திட்டமும் வட சென்னையில்தான் அமைய உள்ளது. பெரிய தொழில் நகரம் பெரம்பூர் அமைந்திருப்பதும் வட சென்னையில்தான். அப்பர் கிளாஸ், மிடில் கிளாஸ், லோகிளாஸ் என அனைத்து தரப்பு மக்களும் கலந்து வாழும் பகுதி இதுவென்றாலும், வளர்ச்சி என்னமோ மிகவும் குறைவுதான்.

அபரிமிதமான வளர்ச்சி: அதாவது, மத்திய சென்னை, தென் சென்னையில் அபரிமிதமான வளர்ச்சி உள்ளது போல, வடசென்னையில் அபார வளர்ச்சி எதுவும் இல்லை. அதனால்தான், வடசென்னையையும் டாப் லெவலுக்கு கொண்டு வர தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்காகவே, தொழில் நிறுவனங்கள், பொழுது போக்கு அம்சங்கள் என்று பல அம்சங்களை இந்த வடசென்னையில் நிறுவி வருகிறது.
தற்போது, "வட சென்னை வளர்ச்சி திட்டம்" என்ற புதிய திட்டத்தை உருவாக்கி, இந்த திட்டத்துக்காக ரூ.1000 கோடி 3 வருடங்களில் செலவிடப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த பணிகளில்தான் தற்போது கவனத்தையும் செலுத்தி வருகிறது.
அடிப்படை வசதிகள்: வடசென்னையில், அடிப்படை வசதிகள் முதல் அல்டிமேட் வசதிகள் வரை ஒன்றுவிடாமல் மாற்ற போகிறதாம்.. இன்னும் 5 வருடங்களில் பெரம்பூர், செம்பியம், மதுரவாயல், கொரட்டூர், அய்னாவரம், மாதவரம், சூரப்பேட்டை ஆகிய இடங்களில், 8 மாடிகளில் இருந்து, 35 தளங்கள் வரை வானளாவிய கட்டிடங்கள் வரப்போகிறதாம். இவை அனைத்துமே குடியிருப்பு வளாகங்களாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
வடசென்னை மேம்பாட்டுத் திட்டத்தால் இந்த பகுதியில் 35 மாடிகள் வரை கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கப்பட உள்ளது.. இதுவரை 10 தளங்கள்வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 35 மாடிகள் வரை இனி உயர போகிறது..
இன்னொருபக்கம், பெரம்பூர், மாதவரத்தில் மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளும் துரிதமாகி வருகின்றன... அதனால்தான், இந்த பகுதிகளில் அதிகமானோர் வீடுகளை வாங்குகின்றனர்... நிலத்தின் மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்தபடியே உள்ளது.
ஹைலைட்: இதில் ஹைலைட் என்னவென்றால், வடசென்னையின் ஃபேமஸ் பகுதியான காசிமேடு, மெரினா பீச் போலவே, நவீனப்படுத்தப்பட உள்ளதாம்.. அதாவது காசிமேடு டூ நெட்டுக்குப்பம் வரை இந்த பீச் ஜொலிக்க போகிறது.. மெரினா பீசிசில் உள்ளது போலவே, குதிரை சவாரி, உட்பட பல பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பீச்சிலும் வரப்போகிறது. முக்கியமாக, நீரூற்று நடைபாதைகள், மீன் சிலை வரப்போகிறது.
வடசென்னையவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆரோக்கியம், விளையாட்டு, போக்குவரத்து, என அனைத்துமே மேம்பட போகின்றன.
மாறுது எல்லாமே: இவைகளுடன், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகள், திருமண மண்டபங்கள், பஸ் ஸ்டாண்டுகளும் நிலையங்களும் வரப்போகின்றன.. உள்ளிட்டவையும் கொண்டுவரப்பட உள்ளது. மொத்தத்தில் வட சென்னை வளர்ந்த சென்னையாக விரைவில் மாறும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அதிகாரிகள்.
ஆக மொத்தம், பின்னி மில், சிம்சன் தொழில் நகரம், பட்டாளம், புளியந்தோப்பு என சின்ன சின்ன தொழில் நிறுவனங்களை கடந்து, சென்னையின் கம்பீரமாக வடசென்னை உயர போகிறது..!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications