அந்த பிரபலம் யார்? வாய் விட்ட அஞ்சலை.. ஆம்ஸ்ட்ராங் கேஸில் இன்றோடு நீதிமன்ற காவலும் முடிகிறது.. பரபர
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைதாகியிருக்கும் அஞ்சலையின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைகிறது.. இதையடுத்து, இன்றைய தினம் அஞ்சலை தொடர்பான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என தெரிகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டதாக காரணம் கூறப்பட்டு வருகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக, ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற அனைவருமே ஒவ்வொருவராக கைதாகி வருகிறார்கள்.. அதில், பாஜக நிர்வாகியான புளியந்தோப்பு அஞ்சலையும் ஒருவர்.
வடசென்னை: வடசென்னையில் கஞ்சா விற்பனை தாதாவாக வலம் வருபவர் அஞ்சலை. ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாகவும் இருந்தவர். பிறகு அவரையே கல்யாணமும் செய்து கொண்டவர். ஒருநாள் பாஜகவில் இணைந்துவிட்டார்.. கட்சியில் சேர்ந்ததுமே பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவி பதவியும் ஒதுக்கப்பட்டது.
அஞ்சலை மீது ஏற்கனவே ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் இருக்கிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் கொஞ்சம் அடங்கியிருந்த அஞ்சலை, ஜெ.மறைவுக்கு பிறகு ஆட்டம் அதிகரித்ததாக சொல்கிறார்கள். இப்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதாகி உள்ளார்.. இதையடுத்து, கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அஞ்சலை.
தலைமறைவு: ஓட்டேரியில் தலைமறைவாக இருந்த அஞ்சலையை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள்.. அப்போது, பாஜகவில் உள்ள ரவுடிகள் பலரை பற்றியும் விலாவரியாக விவரித்தாராம் அஞ்சலை..
பாஜகவிலிருந்து அஞ்சலை நீக்கப்பட்டுவிட்ட நிலையில், அஞ்சலை தந்துள்ள வாக்குமூலமானது, பாஜகவினர் பலருக்கும் சிக்கலை ஏற்படுத்தலாம் என்றெல்லாம் தகவல்கள் பரபரத்து கிடக்கின்றன.
இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சதித்திட்டம் தீட்டுதல் போன்ற பிரிவுகளின் கீழ் அஞ்சலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.. அதுமட்டுமல்லாமல், அஞ்சலையின் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆராய்ந்து தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான அஞ்சலைக்கு ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. இதற்கு பிறகு அஞ்சலை புழல் சிறையில் அடைக்கபட்டார்.
நீதிமன்ற காவல்: இந்த காவல் இன்றுடன் முடிவடைகிறது.. அதனால், இன்று மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.. அப்போது அஞ்சலையின் மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது தெரியவரும்.. எனினும் அஞ்சலையின் ஒவ்வொரு வாக்குமூலமும் பல்வேறு திருப்பங்களை அரசியல் களத்தில் உண்டாக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications