மாஸ் காட்டும் வடசென்னை! பெரம்பூர் ரயில் நிலையத்தில் வரும் மாற்றங்களை கவனிச்சீங்களா! இனி வேற லெவல்
சென்னை: நாடு முழுவதும் சுமார் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தோடக்கி வைத்தார். இந்நிலையில் இந்த 508 ரயில் நிலையங்களில் வடசென்னையின் பெரம்பூர் ரயில் நிலையமும் ஒன்றாகும். இந்த ரயில் நிலையம் விரைவில் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட இருக்கிறது.
உலகில் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. இந்த ரயில்கள் மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு பயணிக்கின்றன. பயணிகளில் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இவ்வளவு பெரிய பணியை மேற்கொள்ளும் ரயில்வே நிர்வாகம் தினம் தினம் தன்னை அப்டேட் செய்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில்தான் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை ரயில்வே துறை அறிவித்திருந்து. இதற்கு அமிர்த் பாரத் நிலையம் திட்டம் என்றும் பெயரிட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக ரூ.24,470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டை பொறுத்த அளவில் 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
அதாவது சேலம், கரூா், திருப்பூா், போத்தனூா், தென்காசி, விருதுநகா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், விழுப்புரம், நாகா்கோவில், பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், திருத்தணி, ஜோலாா்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்கள் ரூ.381 கோடி செலவில் மேம்படுத்தப்படும். அதில் குறிப்பிடத்க்க ரயில் நிலையம்தான் பெரம்பூர். பெங்களூர், கோவை மற்றும் கேரளா ஆகிய இடங்களிலிருந்து சென்னை வருபவர்கள் புறநகர் ரயிலை பிடிப்பதற்காக பெரம்பூரில் இறங்குகின்றன.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 60 சதவிகித பயணிகள் இறங்குகின்றனர் எனில் பெரம்பூரில் 40 சதவிகித பயணிகள் இறங்குகின்றனர். ஆனால் அவர்களை கையாளும் அளவுக்கு இந்த பெரம்பூர் ரயில் நிலையம் வளர்ந்திருக்கிறதா? என்று கேட்டால் இல்லை என்றே சொல்லாம். எனவே இதை மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து பயணிகள் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் நிலையத்திற்கு மட்டும் ரூ.17.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் சுமார் 1,872 ச.மீ பரப்பளவில் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட இருக்கிறது. புதிய கூரைகள், தரைத்தளம், சீரான போக்குவரத்துக்காக பார்க்கிங் வசதி, லிப்ட் மற்றும் நகரும் படிக்கட்டுகள், ரயில்கள் தொடா்பான தகவல்களை அறியும் வகையில் நவீன தகவல் அமைப்பு மற்றும் சிசிடிவி போன்ற அம்சங்கள் சர்வதேச அளவில் மேம்படுத்தப்பட இருக்கின்றன. இது பெரம்பூர் ரயில் நிலையத்தை வேற லெவலில் மாற்றும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications