வட மாவட்டங்களில் வலுவாகும் விஜய்.. தவெகவின் வாக்கு வங்கி உயருமா? உற்று கவனிக்கும் பாமக, விசிக
சென்னை: செங்கோட்டையனின் கட்சி தாவல் தவெகவுக்கு பலத்தை தரும் என்று சொல்லப்பட்டு வருகிறது.. கொங்குவில் வாக்கு வங்கியை உயர்த்தும் தவெக, வட மாவட்டங்களிலும் தன்னுடைய தீவிர கவனத்தை செலுத்தி வருகிறது.. விஜய்யின் இந்த அரசியல் நகர்வை, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் உற்று கவனித்து வருகின்றன.
Behindwoods O2 என்ற யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டி தந்திருந்த மூத்த பத்திரிகையாளர் மணி, "செங்கோட்டையன் என்ற பழுத்த அரசியல்வாதி வருகையினால், தவெகவின் புரொபைல் மாறியிருக்கிறது.. செங்கோட்டையனை தவெக நன்றாக பயன்படுத்தி கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லாவிட்டால் நஷ்டம் தவெகவுக்குதான்..

செங்கோட்டையன் - மேற்கு மண்டலம்
களத்தை பற்றின புரிதல் செங்கோட்டையனுக்கு அதிகமாகவே உள்ளது.. குறிப்பாக மேற்கு மண்டலத்தின் களத்தை நன்றாகவே அறிந்து வைத்துள்ளார்.. அதுமட்டுமல்லாமல் அதிமுகவுக்கு அதிகப்படியான எம்எல்ஏக்களை 2021ல் தந்ததே மேற்கு மண்டலம்தான்.. அந்தவகையில் செங்கோட்டையனின் கட்சி தாவல் முடிவு, குறைந்தபட்சம் மேற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு மேலும் சேதாரத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதற்காக விஜய் ஆட்சியை பிடிப்பார், முதலமைச்சர் ஆவார் என்று சொல்லவில்லை.. ஆனால், ஆட்டத்தை கலைத்துவிடுகிறார்.. ஆட்டத்தைக் கலைக்கும் சக்தியாக (Disruptor) உருவெடுக்கிறார்... இதனால் லாபம் திமுகவுக்கா? அதிமுகவுக்கா? என்பதைத்தான் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.
விஜய் ஃபேக்டர் - தொங்கு சட்டமன்றம்
ஒருவேளை நான்குமுனை போட்டியில் திமுகவுக்குதான் லாபம் என்றாலும், அடுத்த 4 மாதங்களில் அரசுக்கு எதிரான உணர்வலைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டால், அல்லது அரசுக்கு எதிராக நடந்தால், தமிழ்நாட்டில் முதன்முறையாக யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத தொங்கு சட்டமன்றத்தை நோக்கி நகரலாம். அதாவது விஜய் ஃபேக்டரால் தொங்கு சட்டமன்றம் அமைந்தால், இதுவே விஜய்க்கு ஒரு பெரிய வெற்றியாகும்" என்றெல்லாம் கூறியிருந்தார்.
வட மாவட்டங்களில் வலுவாகும் விஜய்
இந்நிலையில், வட மாவட்டங்களிலும் விஜய்யின் செல்வாக்கு எகிறி வருவதாக கூறப்படுகிறது.. பாமகவின் குடும்ப மோதல், அக்கட்சியின் வாக்கு வங்கியை பலவீனப்படுத்தியுள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் பாமகவுக்கு இருந்ததாக கூறப்படும் 10 சதவீத வாக்குகள் யாருக்கு செல்லும் என்பது தெரியவில்லை.. எனினும், தற்சமயம் அந்த இடத்தை விஜய்யின் தவெக மெதுவாக பிடிக்க துவங்கிவிட்டதாக அரசியல் விமர்சகள் கூறுகிறார்கள்.
காரணம், வட மாவட்டங்களில் தவெகவுக்கு செல்வாக்கு அதிகமாகவே உள்ளது.. விக்ரவாண்டியில் நடத்திய முதல் மாநாட்டிற்கு பிறகு, விழுப்புரம், கடலூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் இளைஞர்கள் மற்றும் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாமக, விசிக
மேலும், வேலூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள், கட்சியின் கீழ்மட்ட கட்டமைப்பு வலுவாகவே உள்ளதை நிரூபணம் செய்துள்ளன..
அதேபோல அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களை தனது கொள்கை அடையாளங்களாக விஜய் முன்னிறுத்தியதும், வடமாவட்ட வாக்குகளை அறுவடை செய்ய உதவியாக இருக்கும் என்று கணித்து சொல்கிறார்கள் அரசியல்விமர்சகர்கள்..
ஏற்கனவே வட மாவட்டங்களில் பாமக, விசிக இரண்டுமே நேருக்கு நேர் மோதி வரும் நிலையில், இதில் விஜயின் வருகை சலசலப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி வருகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications